கர்நாடக யாத்திரையில் ராகுல்.. நடுவே வந்த துக்க செய்தி - முலாயம் படத்துக்கு மலர் தூவி மரியாதை
பெங்களூரு: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமான நிலையில் கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

சிகிச்சை
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முன்பாக முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காலமானார்
தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ் மறைவால் உத்தரப்பிரதேச மக்கள், சமாஜ்வாடி தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ராகுல் காந்தி
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "முலாயம் சிங் யாதவின் மரணம் என்பது மிகவும் சோகமான செய்தி. அடிமட்ட அரசியலில் இருந்து வந்த உண்மையான போர்வீரர் முலாயம் சிங். அவரை இழந்து வாடும் அகிலேஷ் யாதவ் மற்று அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்." என பதிவிட்டுள்ளார்.

அஞ்சலி
கர்நாடகா மாநிலத்தில் பாரத் ஜோடோ என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று தும்கூரில் இருந்து சித்ரதுர்கா நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு இடையே கிடைத்த துக்க செய்தியை தொடர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு மரியாதை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த முலாயம் சிங் படத்துக்கு ராகுல் காந்தி, திக் விஜய் சிங், டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications