காங்கிரஸை முந்தும் பாஜக.. ஜேடிஎஸ் ஆதரவு கொடுக்கும் கட்சி ஆட்சியில் அமரும்.. ராஜ்நீதி கணிப்பு!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. ராஜ்நீதி கருத்துக்கணிப்பின்படி பாஜக 100 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி உள்ளது.

மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ், ராஜ்நீதி ஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன.
ராஜ்நீதி வெளியிட்டுள்ள தேர்தலுலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 100 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications