இவ்வளவு ஆவேசம் கூடாது.. கொஞ்சம் ஓவரா ஃபீல் பண்றாங்க.. விடிய விடிய ஆர்சிபி ரசிகர்கள் செய்த சேட்டை!
பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. சாம்பியனான உணர்வை முதல்முறையாக அந்த அணியின் ரசிகர்கள் அனுபவிப்பதால், கொஞ்சம் ஓவராக எமோஷனாகி வருகின்றனர். நேற்றிரவு ஒவ்வொரு விக்கெட்டுக்கும் பட்டாசுகளை வெடித்தும், ஒவ்வொரு டாப் பாலுக்கும் ஆர்சிபி.. ஆர்சிபி.. என்று கோஷம் எழுப்பியும், வெற்றிக்கு பின் சாலைகளில் வாகனத்தை எக்குத்தப்பாக ஓட்டியும் சேட்டை செய்துள்ளனர்.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் முதல்முறையாக ஒரு கபடி போட்டியில் வென்ற போது சூரியும், அப்புக்குட்டியும், "நமக்காக இத்தனை பேரு கை தட்டுறாங்களேடா.. உனக்கும் ஃபீல் ஆகுதா.. எனக்கும் தான்.. வா ஓரமா போய் ஃபீல் பண்ணுவோம்" என்று பேசிக் கொள்வார்கள். அப்படிதான் ஆர்சிபி அணி ஒரு வழியாக 18 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்துள்ளது.

சாதித்த விராட் கோலி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தன்வசப்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு 6,256 நாட்களாக ஆர்சிபி அணி இந்த ஒரு தருணத்திற்காக தான் ஏங்கி கொண்டிருந்தது. அதனை ஒரு வழியாக சாதித்ததும், விராட் கோலி தனது கனவை எட்டியதும் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.
எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்
ஆனால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம் எப்போதும் எல்லை மீறிய ஒன்றாகவே இருப்பதுதான் சிக்கலாக அமைந்துள்ளது. இதற்கு முன்பாக சிஎஸ்கே, மும்பை, கேகேஆர், ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் ஐபிஎல் கோப்பையை வென்ற போது, ஒரு நாளும் எல்லை மீறி கொண்டாடியது கிடையாது. ஒவ்வொரு விக்கெட்டுக்கும் பட்டாசு வெடித்து சிஎஸ்கே.. சிஎஸ்கே.. என்று கோஷமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
வாகன பேரணி
பெங்களூர் மட்டுமல்லாமல் ஐதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் கூட இப்படிதான் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நள்ளிரவில் ஒரு வாகன பேரணியையே ஆர்சிபி ரசிகர்கள் நடத்தி இருக்கிறார்கள்.. நள்ளிரவில் வாகனங்களில் சத்தமாக ஹாரன் அடித்து செல்வது என்ன வகையான கொண்டாட்டம் என்பதே அவர்களுக்கே வெளிச்சம்.
முகம் சுழிக்கும் மற்ற ரசிகர்கள்
அதேபோல் ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டம் மற்ற அணிகளின் ரசிகர்களுக்கே முகசுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சிஎஸ்கே, மும்பை அணிகள் 5 முறை கோப்பையை வென்ற போதும், ஒருநாளும் மற்ற அணிகளை நக்கல் செய்தது கிடையாது. சின்னச்சின்ன ட்ரால்கள் சோசியல் மீடியாவிலும், சில நேரம் மைக் முன்பாகவும் நடக்கும்.
Mysore 🤩
— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) June 4, 2025
RCB the biggest franchise in India. #EeSalaCupNamde #Rcbvspbks #ViratKohli𓃵 #IPLFinals #IPL2025Final #RCBvsPBKSfinal pic.twitter.com/dmRMBB8Y0S
ஆர்சிபி ரசிகர்களின் செயல்
ஆனால் மற்ற அணிகளின் ஜெர்சி அணிந்திருந்த ரசிகர்களிடம் மைதானத்திலேயே எல்லை மீறி இருக்கிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியதால், "இப்போது தெரியுதா.. நீங்க ஏன் 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை என்று" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டங்களின் போது கொஞ்சம் சூழலை அறிந்து கொண்டாட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த முறை சிஎஸ்கே ரசிகர்களிடமும் இப்படிதான் ஆர்சிபி ரசிகர்கள் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications