வாடகைக்கு வீட்டில் பெங்களூரில் கனவிலும் நடக்காத சம்பவம்! வீடு தேடுவோர் கவனம் மக்களே! இப்படி நடக்குமா
பெங்களூர்: பெங்களூர், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவோர் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. இப்போதுகூட ஒரு மோசடி சம்பவம் பெங்களூரில் நடந்து பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் பதிவிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு, இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் குறிப்பாக பல்லாவரம், தாம்பரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாடகைக்கு விடப்படுவதாக சொல்லி மோசடிகள் நடந்தவண்ணம் உள்ளன..

கவர்ச்சிகரமான விளம்பரத்தை ஆன்லைனில் வெளியிட்டு, வாடகை வீடுகளையும் ஆன்லைனிலேயே காட்டி, ஆன்லைனிலேயே "அட்வான்ஸ் கமிஷன்" பெற்றுவிடுகிறார்கள் சில மோசடி புரோக்கர்கள்..
வாடகைக்கு வீடு - அட்வான்ஸ் கமிஷன்
கமிஷனை தந்துவிட்டு, வாடகை வீட்டை நேரில் பார்க்க சென்றால், அப்படியொரு வீடே அந்த ஏரியாக்களில் இருப்பதில்லையாம். அதனால்தான், வாடகைக்கு வீடு தேடுவார் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை போலீசார் பொதுமக்களை அலர்ட் செய்தபடி உள்ளனர்.
இதேபோன்ற பிரச்சனை பெங்களூரிலும் உள்ளது.. வாடகைக்கு வீடு வாங்கி தருவதாக சொல்லி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.. காரணம், பெங்களூரில் ஆயிரக்கணக்கானோர் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை என பெங்களூரில் தங்கி இருக்கிறார்கள்.. இவர்களுக்கு வாடகைக்கு வீடு தேவைப்படுகிறது.
செக்யூரிட்டி டெபாசிட்
ஆனால், வாடகைக்கு வீடு வேண்டுமானால், 'செக்யூரிட்டி டெபாசிட்' செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்களாம்.. அப்படி செலுத்தப்படும் டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படுவதும் இல்லையாம். அல்லது வீட்டிலுள்ள செலவுகளை காரணம் காட்டி அட்வான்ஸ் பணத்தை கழித்து விடுகிறார்களாம்.
எனவேதான், சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, இதுபோன்ற ஆன்லைன் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
ஆனாலும், பெங்களூருவில் மோசடிகள் நடந்தவண்ணம் உள்ளன.. இதோ பெங்களூருவை சேர்ந்த ஒருவர், ஒரு பிரபலமான வெப்சைட் மூலம் வாடகைக்கு வீடு தேடி, மோசடிக்காரர்களிடம் எப்படி ஏமாந்தேன் என்று தற்போது விரிவாக பதிவு செய்துள்ளார்.
ஜேபி நகர் டபுள் பெட்ரூம் வீடு
JB நபர் பகுதியில் 2 பெட்ரூம் கொண்ட வீட்டை தேடி வந்தாராம் இநத் நபர்.. அதன்படியே ஒரு அப்பார்ட்மென்ட் வீடு ஆன்லைனில் கிடைத்துள்ளது.. ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட டபுள் பெட்ரூம் அந்த வெப்சைட்டில் இருந்துள்ளது.. ஆனால், வாடகை 15000 ரூபாய் என போட்டிருக்கவும், அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஜேபி நகர் ஏரியாவில் இத்தனை வசதிகளுடன் டபுள் பெட்ரூம், வெறும் 15000 ரூபாயா? என்று டவுட் வந்துள்ளது.. உடனே அதிலிருந்த நம்பருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்..
அப்பார்ட்மென்ட் வீடு
எதிர்முனையில் பேசிய நபர், ஆமாம், வாடகை ரூ.15 ஆயிரம்தான்,.. ஜிம், நீச்சல் குளம் உள்ளது.. வீட்டிலேயே டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்தும் செய்து தந்துள்ளோம்" என்றாராம்.. இதை கேட்டதுமே அந்நபருக்கு மேலும் ஆச்சரியம் எழுந்துள்ளது. எனவே வீட்டை நேரில் பார்க்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஆன்லைன் புரோக்கர், "எங்களுடையது ஒரு கேட்டட் சொசைட்டி.. அதனால் நேரடியாக நீங்கள் வீட்டை பார்க்க முடியாது. இதற்கென ஒரு தனி ஐடி கார்டு உருவாக்கி தருகிறோம். அந்த ஐடி கார்டை காட்டினால்தான், அப்பார்ட்மென்ட் உள்ளேயே விடுவார்கள். அதற்கு பிறகு வீட்டை பார்க்கலாம். அந்த ஐடி கார்டு வேண்டுமானால், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அரசு அடையாள அட்டை தேவைப்படும்.. அத்துடன் ஐடி கார்டு தயார் செய்ய ரூ.2500 அனுப்பி வைக்க வேண்டும்" என்றாராம்.
அரசு அடையாள ஆவணங்கள்
இதற்கு பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களின் ஆன்லைன் மோசடி குறித்து தெரியவந்துள்ளது.. 2500 ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு, எந்த ஐடியும் தர மாட்டார்களாம்.. அப்படியொரு வீட்டிற்கும் யாரையும் அழைத்து செல்ல மாட்டார்கள்.. அரசு ஆவணம் உள்ளிட்ட அடையாள அட்டையை வைத்து எந்த மோசடியிலும் இவர்கள் ஈடுபடலாம்
எனவே, வாடகைக்கு வீடு பார்ப்போர், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கேட்கிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும்.. எல்லாமே இங்கு மோசடிதான். இதுபோன்ற ஆப்கள் மூலமாகத்தான் மக்களை எளிதாக ஏமாற்றுகிறார்கள்:" என்று பதிவிட்டுள்ளார். இந்த விழிப்புணர்வு பதிவானது, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications