சிக்கன் வாங்கலாம் என்று கடைக்கு போனால்.. ரேட்டை கேட்டு ஆடிப்போன பெங்களூர்வாசிகள்! விண்ணை தொடும் விலை
பெங்களூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ வாசிகள் பலரும் இறைச்சி கடைக்கு படையெடுத்துள்ளனர். இதில் சிக்கன் வாங்க வேண்டும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள் பலரும் சிக்கன் விலையை கேட்டு ஷாக் ஆகியுள்ளனர். அந்த அளவுக்கு பெங்களூரில் ஒரு கிலோ சிக்கன் 300 முதல் 350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் சிக்கன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெங்களூர் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கிலோ சிக்கன் 300 ரூபாயை தாண்டி விற்பனையாவதால், இன்று கடைக்கு சென்ற வாடிக்கையாளளர்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ சிக்கன் 150 முதல் 180 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், சமீப நாட்களாக தொடர்ந்து ரூ.200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

சிக்கன் விலை உயர்வு: ஆனால் இன்று திடீரென்று 300 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டதால் சிக்கன் வாங்க கடைக்கு வந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சிக்கன் எடுத்து சாப்பிடும் பழக்கம் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மத்தியில் உள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன் வாங்க கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.
350 ரூபாய் வரை விற்பனை: கோழிகளுக்கான தீவன விலை உயர்வு காரணமாக சிக்கன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாகவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் சிக்கன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தோல் உரிக்கப்பட்ட சிக்கன் ஒரு கிலோ ரூ.220 - 280 வரை விற்பனையானது. ஆனால், தற்போது விலை அப்படியே கிடுகிடுவென உயரந்து ரூ. 300 முதல் 350 வரைக்கு விற்பனையாகிறது.
திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?: பிராய்லர் கோழி விலை ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த கோழியின் விலை ரூ.200 - 220 வரை விற்பனையானது. சிக்கன் விலை இப்படி திடீரென உயர்ந்தது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், "அதீத வெப்பம் காரணமாக கோழிகள் அதிகம் உயிரிழக்கின்றன. விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணமாகும்” என்றனர்.
சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்ததற்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் எஸ் ஆர்கே குமாரசாமி கூறுகையில், "பெங்களூரில் நிலவிய கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் 30 சதவிகித கோழிகள் உயிரிழந்து விட்டன. வழக்கமாக கோழிகள் 45 நாட்கள் கழித்து 2 கிலோ எடைக்கு வந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு நிலவிய வெப்பத்தால் கோழிகள் தீவனத்தை கூட சாப்பிட முடியாமல் சிரமப்பட்டன.
தீவன விலை அதிகரிப்பு: இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம்’ என்றார். இது போக கோழி தீவனங்களுக்கான விலையும் உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். கோழிகளுக்கு வழங்கப்படும் முக்கிய தீவனங்களில் ஒன்றான சோளத்தின் விலை ரூ.26,500 டன் ஒன்றிற்கு உயர்ந்துள்ளது. சோயாவின் விலை டன் ஒன்றிற்கு ரூ.46,000- உயர்ந்துள்ளது.
குருனா அரிசி வரத்தும் குறைந்துவிட்டது. இந்த அரிசிகள் தற்போது எத்தனால் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கோழி தீவனங்கள் விலை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களே சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறினர். சிக்கன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள்னர். ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்குபவர்கள் அரை கிலோவுடன் திரும்பி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சிக்கன் விலை: இதேபோல் சென்னையிலும் சிக்கன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக 240 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ சிக்கன் இன்று 280 முதல் 300 வரை விற்பனையாகியுள்ளது. திருவள்ளூரில் ஒரு கிலோ 280க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சென்னை வாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவாக கிலோ ரூ.280க்கு விற்பனை ஆகிறது. கிராமப்புரங்களிலும் ஒரு கிலோ சிக்கன் 280 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications