தலைமறைவான பெங்களூர் பாஜக எம்எல்ஏ.. ரவுடி கொலை வழக்கில் எஸ்கேப்.. யார் இந்த பசவராஜ் பைரதி?
பெங்களூர்: பெங்களூரில் ரவுடியும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவக்குமார் என்ற பிகிலு சிவா கொலை வழக்கை சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் தலைமறைவாகி உள்ளார்.
பெங்களூர் கேஆர் புரம் சட்டசபை தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பைரதி பசவராஜ். இவர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு தான் பாஜகவில் ஐக்கியமானார். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

அதாவது கடந்த ஜூலை 15ம் தேதி பெங்களூர் பாரதி நகரில் உள்ள மினி அவென்யூ அருகே ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கொலையானவரின் பெயர் சிவக்குமார் என்ற பிகிலு சிவா (வயது 40) என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதோடு தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். சிவக்குமாரின் தாயிடம் நடத்திய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 2025 பிப்ரவரி மாதம் சிவக்குமாரை ஜெகதீஷ், கிரண் உள்பட சிலர் சொத்து விவகாரம் தொடர்பாக மிரட்டி சென்றது தெரியவந்தது.மேலும் அவர்கள் கேஆர்புரம் பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எம்எல்ஏ பைரதி பசவராஜியிடம் 2 முறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிறகு ஜூலை 21ம் தேதி வழக்கு விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 5 பேர் சரணடைந்த நிலையில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தான் இந்த கொலை பைரதி பசவராஜ் தூண்டுதலின் பேரில் தான் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் தான் தற்போது பைரதி பசவராஜ் தலைமறைவாகி உள்ளார். அவர் கர்நாடகாவை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை சிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தான் பைரதி பசவராஜ் சார்பில் பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிஐடி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், எம்எல்ஏ பைரதி பசவராஜ்க்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. அவருக்கும் சிவக்குமார் கொலைக்கும் தொடர்பு உள்ளது என்று வாதம் வைத்தனர்.
வாதத்தை கேட்ட நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதனால் பைரதி பசவராஜ் தனக்கு முன்ஜாமீன் கிடைக்கும் வரை பொதுவெளியில் தலைகாட்டமாட்டார். ஆனால் முன்ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக அவரை கைது செய்ய சிஐடி போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications