52 ஆண்டுகளாக தேசிய கொடிக்கு பதில்.. காவி கொடி ஏற்றியது ஏன்? ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கம்
பெங்களூர்: கடந்த 1950ம் ஆண்டு தொடங்கி 2002 வரை ஆர்எஸ்எஸ் தனது தலைமை அலுவலகத்தில் தேசிய கொடிக்கு பதில், காவி கொடியைதான் ஏற்றி வந்திருந்தது. இந்நிலையில், தேசிய கொடி விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கமளித்திருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா, அமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரில் இந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

தேசியக்கொடி vs காவிக்கொடி
இந்நிகழ்வில் அவர் பேசியதாவது, "தேசியக் கொடி 1933-ல் முதன்முதலில் தீர்மானிக்கப்பட்டது. அப்போது, சுதந்திர பாரதத்தின் கொடியாக பாரம்பரிய காவி கொடியே இருக்க வேண்டும் என்று ஒருமனதாகக் கொடிக் குழு பரிந்துரைத்தது. ஆனால், காந்தியடிகள் தலையிட்டு மூன்று வண்ணங்கள் இருக்கும்படி கூறினார். அதில் உச்சியில் காவி நிறம் இருக்க வேண்டும் என்றார். ஆரம்பம் முதல் தேசியக் கொடியை மதித்து, மரியாதை செலுத்தி, பாதுகாத்து வருகிறோம். காவி கொடிக்கும் தேசியக் கொடிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் இல்லை.
ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சிவப்பு கொடி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராட்டையுடன் கூடிய மூவர்ணக் கொடி உள்ளது. குடியரசுக் கட்சிக்கு நீலக் கொடி உள்ளது. எங்களுக்கு எங்களுடைய காவி கொடி உள்ளது. அதே நேரத்தில் நாங்கள் தேசியக் கொடியை மதிக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸுக்கு ஆதரவு
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை. வாக்கு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றில் பங்கேற்பதில்லை. எங்கள் அமைப்பு சமூகத்தை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அரசியல் இயல்பாகவே பிரிவினைக்கு வழிவகுக்கும் என்பதால், நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். இப்போது நாங்கள் ஒரு சக்தியாக இருப்பதால், சரியான கொள்கைகளை ஆதரிக்க எங்கள் பலத்தை வெளிப்படுத்துகிறோம்.
"வெளிப்படையாக இதை செய்கிறோம்"
தனிநபரையோ, கட்சியையோ அல்ல, கொள்கையை மட்டுமே நாங்கள் ஆதரிக்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதன் கட்டுமானத்திற்கு ஆதரவாக இருந்தவர்களை எங்கள் அமைப்பு ஆதரித்தது. அப்போதைய சூழலில் பாஜக இருந்தது. ஒருவேளை காங்கிரஸ் ஆதரித்திருந்தால், அந்தக் கட்சிக்கும் எங்கள் அமைப்பினர் வாக்களித்திருப்பார்கள். எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி மீது சிறப்புப் பற்று இல்லை. சங்கம் என்பது ஒரு கட்சியின் அங்கம் அல்ல. எந்தக் கட்சியும் எங்களுடையது இல்லை, அதேசமயம் அனைத்துக் கட்சிகளும் எங்களுடையவைதான். ஏனெனில் அவை பாரதிய கட்சிகள். நாங்கள் பரந்த இந்தியாவை ஆதரிக்கிறோம், இதை நாங்கள் வெளிப்படையாகச் செய்கிறோம்.
இந்து சமூகத்தை ஒருங்கிணைப்பது
எங்களுக்கு எங்களுடைய சொந்தக் கருத்துகள் உள்ளன. இந்தக் நாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு, சுமார் 52 ஆண்டுகளுக்கு தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
இந்த திசையில் பயணிப்பவர்களை நாங்கள் ஆதரிப்போம். இது குறித்து பொதுமக்கள் சிந்தித்து, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். பொதுமக்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் விருப்பம். முழு இந்து சமூகத்தையும் ஒன்றிணைத்து, ஒழுங்கமைத்து, நற்பண்புகளைப் புகுத்த விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் ஒரு வளமான மற்றும் வலிமையான பாரதத்தை உருவாக்குவார்கள். இந்த பாரதம் தர்ம ஞானத்தை உலகிற்கு வழங்கி, உலகம் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும், அமைதியாகவும் மாறும். இந்த பணியை முழு சமூகமும், முழு தேசமும் மேற்கொள்ள வேண்டும்.
நோக்கம் என்ன?
அதற்காக நாங்கள் இந்து சமூகத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடையது ஒரே பார்வை, தனிப்பார்வை. அந்தப் பார்வையை நாங்கள் நிறைவேற்றிய பிறகு, வேறு எதுவும் செய்ய விரும்பவில்லை. முழு இந்து சமூகத்தையும் ஒழுங்கமைப்பதே எங்கள் பணி. இதை நாங்கள் முடிப்போம், ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் மீதமுள்ளவற்றைச் செய்யும். ஒழுங்கமைக்கப்பட்ட, வலிமையான இந்து சமூகமே எங்கள் நோக்கம், எங்கள் பார்வை" என்று கூறியிருக்கிறார்.
-
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications