"சிதைந்து கிடந்த ஆணுறுப்பு.." முகத்தை கடித்து குதறிய நாய்.. ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷன் கொடூரம்
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்து கிடந்த ரேணுகாசாமி எந்தளவுக்கு டார்ச்சர் செய்யப்பட்டார்... அவரது உடல் எந்தளவுக்கு கொடூரமான நிலையில் இருந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி.. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், மருந்துக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா தான் காரணம் என்று ரேணுகாசாமி கருதியுள்ளார்.
கொலை: இதனால் பவித்ரா குறித்து அவர் ஆபாசமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரேணுகாசாமி தனது ஆபாச போட்டோகளை பவித்ராவுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, இது தொடர்பாக தர்ஷனிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்தே ரேணுகாசாமி அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது ரேணுகாசாமியை கட்டைகள், இரும்பு ராட்களை கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த கடுமையான காயங்களால் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளது பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரிய வந்துள்ளது.
கொடூரம்: ரேணுகாசாமியின் ஆணுறுப்பு மிக மோசமாக சிதிலமடைந்த நிலையில், இருந்துள்ளது. மேலும் ரேணுகாசாமிக்கு ஒரு பக்கம் காதுகளும் வெட்டப்பட்டு இருந்ததாம்.. அவரது உடல் ஜூன் 9ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு வாய்க்காலில் கண்டறியப்பட்ட நிலையில், அப்போது அவரது முகத்தை நாய்கள் கடித்துக் குதறி இருக்கிறது.
தர்ஷனின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சித்ரதுர்காவில் உள்ள அவரது சொந்த ஊரில் இருந்து கடந்த ஜூன் 8ஆம் தேதி தர்ஷனின் ஆட்கள் ரேணுகாசாமியை கடத்தியுள்ளனர். அவர்கள் நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான இடத்திற்கு ரேணுகாசாமி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தான் அவரை டார்ச்சர் செய்து கொன்றுள்ளனர்.
சிசிடிவி: அன்றைய தினம் இரவு 7 மணியளவில் அந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் வருவதும்.. பிறகு விடியற்காலை 3 மணிக்கு அங்கிருந்து வெளியேறுவதும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.. அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ஆகியோர் இணைந்து ரேணுகாசாமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை கட்டி வைத்து உடலில் மின்சாரத்தையும் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு நள்ளிரவில் அவரது உடலை வாய்க்காலில் வீசியுள்ளனர். மேலும், அவரை கடத்திய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் மொபைலை வீசிவிட்டனர்.
பகீர் திருப்பங்கள்: இந்த வழக்கு விசாரணையில் பல பகீர் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. ரேணுகாசாமி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ரத்த கறை மாதிரிகளை போலீசார் சேகரித்துள்ளனர். ரேணுகாசாமியின் முடி, ஆடைகளை அங்கிருந்து அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், தர்ஷன் மற்றும் பவித்ராவின் செருப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதைச் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக கொலை வழக்கில் வேறு ஒருவரைச் சரணடைய வைக்கவும் இவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக ஒருவரைப் பிடித்து அவருக்கு முதலில் 5 லட்சம் கொடுத்துள்ளனர். சில மாதம் கழித்து மேலும் 25 லட்சம் தருவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர். இருப்பினும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலையில் தர்ஷனுக்கு தொடர்பு இருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications