கர்நாடகா காட்டு குகைக்குள் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் குழந்தைகளின் அப்பா யார்? எப்படி சாப்பிட்டார்கள்
பெங்களூர்: கர்நாடகாவில், ராஜநாக பாம்புகளும், மோசமான வன விலங்குகளும் வாழும் பகுதிக்கு நடுவே அமைந்த ஒரு குகையில் வாழ்ந்து வந்த ரஷ்யப் பெண், அரை நிர்வாணமாக தனது 2 பெண் குழந்தைகளுடன் மீட்கப்பட்டது பற்றிதான் நாடு முழுவதும் இப்போது, பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இப்போது, அந்தப் பெண் பற்றியும், அவரது குகை வாழ்க்கை பற்றியும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. காட்டுக்குள் மூன்று பேரும் என்ன சாப்பிட்டார்கள்? 8 வருடங்களாக இந்தியாவில் அந்தப் பெண் இருக்கிறாரே, அப்படியானால் இந்த குழந்தைகளின் தந்தை யார்? ஏன் அவர் விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்தார் போன்ற பல கேள்விகளுக்கு பதில்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
கர்நாடகாவின், கோகர்ணா வனப்பகுதியில் உள்ள ராமதீர்த்தா மலைக் குகை ஒன்றில், 40 வயது ரஷ்யப் பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தது 2 நாட்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. விஷ ஜந்துக்களும், பாம்புகளும் நிறைந்த அந்தக் குகையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், கடும் மழை பெய்து வந்ததால் வனப் பகுதிக்குள் ரோந்தை தீவிரப்படுத்தியிருந்தனர் போலீசார். அப்போது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியிலுள்ள குகைக்கு வெளியே துணிகள் காயப்போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்துபோயினர் போலீசார். அங்கு, ஈரமான பாய்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் இருந்திருக்கின்றன. பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன, மனித கால்தடங்களும், பன்றி போன்ற விலங்குகளின் கால்தடங்களும் அங்கே காணப்பட்டன.

போலீசுக்கு அதிர்ச்சி
காவல்துறையினர் உள்ளே நுழைந்தபோது, சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க வெள்ளை நிறமும், பொன்னிற முடியும் கொண்ட ஒரு சிறுமி அரை நிர்வாணமாக குகையிலிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார். சிறுமியைக் கண்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கொஞ்சம் பயந்துவிட்டனர் என்றே சொல்லலாம். மேலும் குகைக்கு உள்ளே நுழைந்து தேடியபோது, அங்கே ஒரு பெண் தனது ஆறு வயது மகளுடன் இருந்திருக்கிறார். அந்தப் பெண் தன்னை நினா குட்டினா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கிருப்பது தனது மகள்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆன்மீக வாழ்க்கை
"நான் இந்தக் குகையில் இருக்க விரும்பினேன், தியானம் செய்ய விரும்பினேன், அதான் இங்கேயே தங்கிவிட்டேன்" என்று நினா அசால்ட்டாக கூறி போலீசாரை அதிர வைத்தார். அதை உறுதி செய்வதுபோல, தெய்வ விக்கிரகத்திற்கு பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததையும் போலீசார் பார்த்துள்ளனர்.
நான், கூட்டத்தில் இருந்து விலகி, தனிமையில் ஆன்மீக வாழ்க்கை வாழத்தான் குகையைத் தேர்ந்தெடுத்தேன் எனவே என்னை இங்கிருந்து போகச் சொல்லாதீர்கள் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

சாப்பாடு எப்படி
வாரம் ஒருமுறை சந்தைக்குச் சென்று பழங்கள், காய்கறிகள், ரொட்டி, நூடுல்ஸ் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்திருக்கிறார் இந்த பெண்மணி. பிறகு வாரம் முழுக்க குகையிலேயே தங்கி வாழ்ந்துள்ளார். தனது குழந்தைகளுக்கு பாடவும், தியானம் செய்யவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். மூவருமே பக்கத்தில் ஓடும் ஆற்றில் குளித்து, எளிமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பாம்புகள் நண்பர்கள்
நினாவுக்குப் பணம் ஒரு பிரச்சினையே இல்லை. அவரது உறவினர்கள் பணம் அனுப்பி வந்துள்ளனர். "இங்கே சுற்றும் பாம்புகள் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன" என்று நினா கூறியது போலீசாரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அந்தக் குகை அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது அல்ல என்பதைப் போலீசார் நீண்ட நேரம் எடுத்து விளக்கிய பிறகு, வெளியேற ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது, குமட்டா பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அவர்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விசா காலாவதி
போலீஸ் விசாரணையில், நினாவின் விசா 2017ம் ஆண்டு, ஏப்ரல் 17 அன்றே காலாவதியாகிவிட்டது தெரியவந்தது. 2018 இல் கோவாவில் தற்காலிகமாக விசா புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், அதுவும் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகிவிட்டது.
இப்போது எல்லோருக்குமே எழும்பும் மிக முக்கியமான கேள்விகள் சில உள்ளன:
நினா 8 வருடமாக இந்தியாவில் இருக்கிறார். அப்படியானால் இந்தக் குழந்தைகளின் தந்தை யார்? அவர் ஏன் அவர்களுடன் இல்லை? இந்தக் கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2017-ல் விசா காலாவதியான பிறகு, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக அவர் இந்தியாவில் எப்படித் தங்கியிருந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
அவர் 2 வாரங்களாக இந்த குகையில் வசிப்பதாக கூறியிருந்தார். இந்தக் குகை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது? குகை வாழ்க்கை எப்படித் தொடங்கியது? என்பது போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
ராமதீர்த்தா குகை
நினாவுக்கு இந்தியா மிகவும் பிடித்திருந்ததாகவும், நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ராமதீர்த்தா குகை எப்போதும் சாமியார்களுக்கும் வெளிநாட்டினருக்கும் புகலிடமாக இருந்திருக்கிறது. கடந்த காலங்களில் பல வெளிநாட்டு ஆண்கள் கோகர்ணா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒரு பெண் காட்டுப்பகுதியில் வாழ்வது இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
நினா மற்றும் அவரது குடும்பத்தினரை பெங்களூரில் உள்ள வெளிநாட்டினருக்கான, மண்டலப் பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் பரிந்துரைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அவர் ரஷ்யாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த மேலதிக தகவல்கள் வெளிவரும்போது, உங்களை மீண்டும் சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள்!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications