சபரிமலையில் மிகப்பெரிய தங்க மோசடி.. யார் இந்த உன்னிகிருஷ்ணன் போற்றி.. சிக்கலில் பெங்களூர் மலையாளி
பெங்களூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு வெளியே உள்ள 'துவாரபாலகா' சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. ஆனால் இதில் தங்கம் பெரிய அளவில் காணாமல் போயிருந்தது. இந்த விவகாரம் கேராளவை மட்டுமல்ல.. இந்தியாவையே உலுக்கி உள்ளது. தங்க கொள்ளை இடது சாரிகள் அரசின் துணையோடு நடந்ததாக இந்த விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மலையாளி ஒருவர் சந்தேக வளையத்தில் சிக்கியிருக்கிறார்.
சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவார பாலகர்களின் தங்க பீடங்கள் காணாமல்போனது. துவார பாலகர்களின் மீது பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் கடந்த 7-ம் தேதி அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தேவசம் விஜிலென்ஸ் நடத்திய விசாரணையில் லாக்கர் ரூமில் பீடங்கள் இல்லை என தெரியவந்தது. மேலும், தங்க மூலம் குறித்து புகார் கிளப்பிய பெங்களூரில் வசிக்கும் மலையாளியான உன்னிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி வீட்டில் இருந்து அவை மீட்கப்பட்டது.

தேவசம் போர்டு சந்தேகம்
இதையடுத்து தங்க பீடம் குறித்து விசாரணை நடத்திய தேவசம் விஜிலென்ஸ் எஸ்.பி கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தங்க பீடங்கள் மட்டு அல்ல, சபரிமலை கோயிலில் உள்ள தங்கம் குறித்து கணக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரத்தில், உன்னிகிருஷ்ணன் மீதே சந்தேகம் திரும்பி உள்ளது. ஏனெனில் துவாரபாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசியதைக் காணிக்கையாக வழங்கியவர் இவர். இந்த தங்க முலாம் பூசுவதற்காக இவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெருந்தொகை நிதி திரட்டியதாக தேவசம் விஜிலென்ஸ் பிரிவு சந்தேகிக்கிறது.
உன்னிகிருஷ்ணன் போற்றி யார்
உன்னிகிருஷ்ணன் போற்றி ஒரு காலத்தில் ஸ்ரீராமபுரா கோயிலில் உதவி அர்ச்சகராக இருந்தவர், சபரிமலையிலும் சிறிது காலம் பணியாற்றியவர். இப்போது பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்று விஜிலென்ஸ் கருதுகிறதாம். ஏற்கனவே அவர் மீது இரண்டு குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முறைகேடு எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
சபரிலை சன்னிதானத்தில் இருந்து துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசிய பகுதிகளைப் பழுதுபார்ப்புக்காகச் சென்னைக்கு அனுப்பியதில் முறையான அனுமதி பெறப்படவில்லை. இதனை கேரள உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தபோது, 2019-ல் போற்றி கொடுத்த தங்க முலாம் பூசிய செம்பு உறையின் எடை 4.541 கிலோ குறைந்திருப்பது தெரியவந்தது. உன்னிகிருஷ்ணன் போற்றியின் காணிக்கை குறித்த ஆவணங்களில் சில இடங்களில் அது 'செம்பு' என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் சந்தேகத்தை அதிகமாக்கியது.
சகோதரி வீட்டில் மீட்டனர்
மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றி, துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசிய 'பீடம்' காணாமல் போய் விட்டதாக புகார் கிளப்பினார். ஆனால், தேவஸ்வம் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதை உன்னிகிருஷ்ணன் போற்றியின் சகோதரியின் வீட்டில் இருந்து மீட்டனர். இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான யுடிஎஃப் (UDF - காங்கிரஸ் கூட்டணி), இது ஆளும் சிபிஐ(எம்) அரசின் துணையுடன் நடந்த 'தங்கக் கொள்ளை' என்று குற்றம் சாட்டி சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு, சபரிமலை கோயிலின் விலைமதிப்பற்ற பொருட்களை மதிப்பிடுவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. சங்கரனை நியமித்திருக்கிறது. அரசாங்கமோ, இந்தச் சர்ச்சைக்குரிய விவகாரம் 1999-ஆம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட வேண்டும் என்று உன்னிகிருஷ்ணன் போற்றி மீது குற்றம்சாட்டி உள்ளது.
நிதி மோசடி நடந்ததாக புகார்
திருவாங்கூர் தேவஸம் போர்டின் விஜிலென்ஸ் அதிகாரிகளும், தற்போதைய விசாரணையில், இந்தத் தங்க முலாம் பூசுவதற்குப் பல மாநிலங்களிலிருந்து பெரிய அளவு நிதி திரட்டி, தங்க முலாம் பூசியதை காணிக்கையாக அளித்த உன்னிகிருஷ்ணன் போற்றியே முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.. பெங்களூரைச் சேர்ந்த ஒரு சில தொழிலதிபர்களும் இவருடன் கூட்டுச் சேர்ந்து இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, சபரிமலை தங்க முலாம் பூசிய சில பகுதிகள் 2019-ஆம் ஆண்டு பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
உன்னிகிருஷ்ணன் போற்றி திட்டவட்டமாக மறுப்பு
ஆனால் உன்னிகிருஷ்ணன் போற்றி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தான் நிரபராதி என்பதை நிரூபிக்க, நீதிமன்றமும் தேவசம் போர்டின் விஜிலென்ஸ் பிரிவும் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்பேன் என்று கூறினார்..
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications