கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு- உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
Recommended Video
டெல்லி: கர்நாடக சட்டசபையில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுக்கும் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

இவர்கள் ராஜினாமா செய்தால் நிச்சயம் கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் என்பதால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து 15 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதாலும் அரசியல் சாசன விவகாரம் என்பதாலும் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காரசார விவாதம் நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதம் செய்தார்.
ஒரு கட்சியை பிடிக்காமல்தான் ராஜினாமா செய்கின்றனர். விரும்பாத ஒரு கட்சியின் கொறடா உத்தரவை எப்படி மதிக்க முடியும்? என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கர்நாடகா சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகர் என்ன செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார். அது போல் எம்எல்ஏக்கள் தரப்பில் முகுல் ரோத்தகி வாதம் செய்தார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் நாளை காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications