சித்தராமையா பாதுகாப்பில் குளறுபடி? தவறான இடத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டர் நேற்று லிங்காசுகூரில் தரையிறங்கி இருக்கிறது. ஆனால், ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிடப்பட்ட இடம் வேறு, தரையிறங்கிய இடம் வேறு. இச்சம்பவம் அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
அவர் இறங்க வேண்டிய ராய்ச்சூர் சாலை, சீனிவாஸ் லே அவுட் ஹெலிபேடிற்கு பதிலாக, விமானி கலபுரகி சாலையில் தவறாக தரையிறக்கினார். அந்த இடம் பாஜக எம்.எல்.ஏ மன்னாப்பா வஜ்ஜலுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

சித்தராமையாவின் ஹெலிகாப்டர் லேண்ட் செய்ய வேண்டிய இடத்தில் உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த காவல் அதிகாரிகள் காத்திருக்க, அந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியின் ஹெலிகாப்டர் வந்திறங்கி குழப்பத்தை ஏற்படுத்தியது. முதல்வர் இறங்கிய தவறான இடத்தில் இரு காவல் உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இருந்தனர். தவறுணர்ந்ததும் அதிகாரிகள் விரைந்தனர்.
ஹெலிகாப்டர் தவறான இடத்தில் தரையிறக்கப்பட்டது, தீவிரமான பாதுகாப்பு குறைபாடாகும். இந்த தகவல் தொடர்பு பிழை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய முறைப்படியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications