பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிகாலையில்.. கருவறையை திறந்து பார்த்தால்.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்ற பூசாரி..!

சிவபெருமான் கண்ணை திறந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: "சிவபெருமான் கண்ணை தொறந்துட்டாரு, எங்களுக்கு அது போதும்" என்று பூரித்து சொல்கிறார்கள் கர்நாடக மக்கள்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கோகக் என்ற ஊர் உள்ளது.. இங்கு ஒரு சிவன் கோயில் இருக்கிறது.. இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் திடீரென கண்ணை திறந்து விட்டார் என்று தகவல் காட்டுத் தீ போல அந்த பகுதிகளில் பரவியது.

 Shivalinga near Karnataka, says devotees

இதனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு படையெடுத்துள்ளது.. இப்படித்தான் 17 வருஷத்துக்கு முன்பும் இதே சிவபெருமான் கண்ணை திறந்தாராம்.

அப்போது தீவிரமான டெங்கு காய்ச்சல் பரவி கொண்டிருந்ததாம். சிவன் கண்ணை திறந்ததும், அப்படியே காய்ச்சல் காணாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள். இது 2வது முறை.. இப்படி கண்ணை சிவன் திறக்கிறார் என்றால், கொரோனா ஒரு முடிவுக்கு வரப்போவதாக அர்த்தம் என்கிறார்கள்.

அந்த கோயில் பூசாரி சதப்பா தான் இதை முதலில் பார்த்திருக்கிறார்.. பூஜை செய்ய கருவறையை திறந்து பார்த்தால், சிவலிங்கத்தின் கண்கள் நன்றாக திறந்திருந்ததாம். அதற்கு பிறகுதான் ஊரையே கூட்டி உள்ளார். முதலில் ஊர் மக்கள்தான் வந்தார்கள்.. இப்போது கர்நாடக முழுவதுமிருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், இதை பற்றி பகுத்தறிவாதிகள் சொல்லும்போது, கொரோனா அதிகமாகிவிட்டது.. யார்கையிலும் காசு இல்லை.. வருமானத்தை பெருக்க எதையாவது சொல்லுவார்கள்.' என்றார்.. பிள்ளையார் பால் குடித்த சம்பவம் போல எல்லா ஊரிலும் இப்படி நடந்து வருகிறது போலும்..!

English summary
Shivalinga near Karnataka, says devotees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X