பெங்களூரில் தனியாக வந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறல்.. வெளியான ஷாக் சிசிடிவி காட்சி
பெங்களூர்: பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு விடுதிக்கு தனியாக திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் வழிமறித்து கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த இளைஞரை பிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் சமீப காலமாக நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. அதாவது ஐடி கம்பெனிகள் நிறைந்துள்ள பெங்களூரில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பெங்களூரில் உள்ள கே ஆர் புரம் ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் உணவு தேடி தனது சகோதரருடன் சென்ற 19 வயது வடமாநில இளம்பெண்னை ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தின் வடு நீங்குவதற்குள், ஐடி பணிக்கு சென்றுவிட்டு இரவில் தனியாக விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த 2 இளம்பெண்களில் ஒருவரை அங்கு வந்த வாலிபர் ஒருவர் கட்டிப்பிடித்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டிசன்கள் கடும் கோபம்
https://twitter.com/i/status/1909162983282094434தனியாக சென்ற பெண் ஒருவரை துரத்தி சென்று பாலியல் சீண்டலில் வாலிபர் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள சுத்தகவுடேபளயா பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். குறுகலான சந்து என்பதால் இரண்டு பெண்களும் தப்ப முயற்சிப்பதற்குள் விரட்டி வந்த அந்த நபர், அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த அத்துமீறிய செயலுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கர்நாடக போலீசாரை வலியுறுத்தியுள்ளனர். கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு 1.55 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தாமாக முன்வந்து காவல்துறை இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூர் காவல்துறை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இரண்டு பெண்களில் ஒரு பெண்னிடம் சீண்டலில் ஈடுபடுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அப்போதுதான் முறைப்படி புகாரை பெற்று வழக்கு விசாரணையை தொடங்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அளித்த பேட்டியும் சர்ச்சையாகியுள்ளது. பெங்களூர் போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற செயல்கள் நடக்கத்தான் செய்யும் எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications