தைரியம் இருந்தா என்னை தொட்டுப்பாருங்க.. சவால் விட்ட சித்தராமையா.. ஸ்தம்பித்து போன சட்டப்பேரவை
தைரியம் இருந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் என கர்நாடக அமைச்சருக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சவால் விட்டார்.
பெங்களூரு: தன்னுடைய கதையை முடிக்க வேண்டும் என அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசியதை குறிப்பிட்டு, தைரியம் இருந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் என கர்நாடக அமைச்சருக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சவால் விட்டார்.
சட்டப்பேரவையில் பேசிய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது, இடை மறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தன்னுடைய கதையை முடிக்க வேண்டும் என அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசியதை குறிப்பிட்டு, அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினால் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன். தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள்" என்று சவால் விட்டார்.
மேலும் பாஜகவை ஊழல் அரசு என்று கடுமையாக விமர்சித்த சித்தராமையா, முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் நடந்த ஊழல்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

கர்நாடகா சட்டசபை
2023-24ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மீதான விவாதம் கர்நாடகா சட்டசபையில் நடந்து வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரும் விசாரணைகளை நிராகரிப்பதன் மூலம் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மூடிமறைக்க பொம்மை அரசாங்கம் விரும்புகிறது.

தொட்டு பாருங்கள்
உயர்கல்வி அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயண் தன்னைக் கொல்ல மக்களைத் தூண்டிவிட முயன்றதாகவும், முதல்வர் பொம்மையும் உள்துறை அமைச்சர் ஞானேந்திராவும் அமைச்சர் அஸ்வத் நாராயணக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்தனர். இதன் மூலம் ஞானேந்திரா மிகவும் பலவீனமான உள்துறை அமைச்சர் என்பது தெரிகிறது. உள்துறை அமைச்சகம் பயனற்றது. அவர்களாக முன்வந்து டாக்டர் அஷ்வத் நாராயண் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை" என சித்தராமையா கூறினார். கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினால் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன். தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள் என சித்தராமையா சவால்விட்டார்.

சித்தராமையா
சித்தராமையா மேலும் கூறுகையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முந்தைய காங்கிரஸ் அரசு மீது ஆதாரமின்றி பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது, அவரது கீழ் செயல்பட்ட கர்நாடகா காங்கிரஸ் அரசு, எட்டு வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது, எனவே பாஜக அரசு அதேபோன்று அனைத்து ஊழல்கள் குறித்தும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

என்ன பேசினார்
முன்னதாக கடந்த வாரம், 18ஆம் நூற்றாண்டின் மன்னர் திப்பு சுல்தான் எப்படி முடிக்கப்பட்டாரோ, அந்த வகையில் சித்தராமையாவின் கதையை மக்கள் "முடிக்க வேண்டும்" என்று கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் டாக்டர் அஸ்வத் நாராயண் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அஸ்வத் நாராயண் தான் தேர்தலில் தான் கதையை முடிக்க வேண்டும் என்று கூறினேன். அவரை கொல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தவறாக புரிந்து கொண்டார்கள் என விளக்கம் அளித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications