சாபக்கேடு.. கர்நாடக முதல்வராக 5 ஆண்டு நீடிப்பது கஷ்டம்! 40 வருடங்கள் பிறகு சாதித்த சித்து.. இம்முறை?
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வராக 5 ஆண்டு ஆட்சியை முடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். முதல்வராக இருப்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பதவியை இழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இருப்பினும் கடந்த 40 ஆண்டு சாபக்கேட்டை முறியடித்து சித்தராமையா கடந்த முறை 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக முடித்த நிலையில் நாளை மறுநாள் மீண்டும் முதல்வரவாக பதவியேற்கிறார். இந்நிலையில்தான் அவர் 5 ஆண்டு முதல்வர் பதவியை வெற்றிகரமாக முடிப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.

பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த விழாவுக்கு பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் உள்பட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை கர்நாடகாவின் 24வது முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். இவர் ஏற்கனவே 2013 முதல் 2018 வரை ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நிலையில் தற்போது 2வது முறையாக முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 1952 முதல் 2023 வரை மொத்தம் 24 பேர் முதல்வராக இருந்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேர் மட்டுமே 5 ஆண்டு முதல்வர் பதவியை நிறைவு செய்துள்ளனர். இதில் ஒருவர் தான் சித்தராமையா. மாறாக 21 பேர் முழுமையாக முதல்வர் பதவியை நிறைவு செய்யவில்லை.
முதல் முதல்வர்: கர்நாடகாவின் முதல் முதல்வராக (அப்போதைய கூர்க் மாநிலம்) 1957 ல் காங்கிரஸ் கட்சியின் பூனஜா செயல்பட்டார். இவர் 4 ஆண்டு 218 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதேபோல் செங்கலயராய ரெட்டி, கெங்கல் ஹனுமந்தய்யா, கடிதால் மஞ்சப்பா உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் பதவியை 5 ஆண்டு அனுபவிக்கவில்லை. அதன்பிறகு மைசூர் மாநிலமாக பெயர் மாற்றப்பட்டது. இதி்ல 1956 முதல் 1972 வரை நிஜலிங்கப்பா, பிடி ஜாட்டி, எஸ்ஆர் காந்தி, வீரந்திர படேல் உள்ளிட்டவர்கள் முதல்வர்களாக இருந்தனர் இதில் நிஜலிங்ப்பா மட்டும் முதல்வர் பதவியை 5 ஆண்டு நிறைவு செய்தார்.
மைசூரு முதல்வர்கள்: 2-வது சட்டசபையின் போது முதல்வராக இருந்த ஜாட்டி 3 ஆண்டுகள் 297 நாட்கள் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து கந்தி 98 நாட்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 3-வது சட்டசபையின் போது முதல்வராக பதவியேற்ற நிஜலிங்கப்பாதான் முதல் முறையாக முழுமையாக பதவி காலத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கர்நாடகா முதல் முதல்வர்: கர்நாடகாவில் 1972ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக இருந்த தேவராஜ் அரஸ் 1977ம் ஆண்டு வரை 5 ஆண்டு பதவியை நிறைவு செய்தார். அதன்பிறகு நடந்த தேர்தலில் தேவராஜ் அரஸ் வெற்றி பெற்று 1978ல் மீண்டும் முதல்வரானார். இருப்பினும் அவர் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யவில்லை. சுமார் 2 ஆண்டு மட்டுமே இருந்த நிலையில் குண்டுராவ் முதல்வரானார். இவர் 3 ஆண்டு முதல்வராக இருந்தார். அதன்பிறகு ராமகிருஷ்ணஹெக்டே முதல்வரானார்.
ராமகிருஷ்ணஹெக்டே: இதையடுத்து 1983ல் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி வென்று ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். 1984ல் லோக்சபா தேர்தலில் ஜனதா கட்சி படுதோல்வியை தழுவியதால் முதல்வர் பதவியை ராஜினிமா செய்தார். 1985 தேர்தலில் மீண்டும் ஜனதா கட்சி வெல்ல ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தனது பதவியை ராஜினமா செய்தார்.
எஸ்ஆர் பொம்மை: இதையடுத்து 1988ல் ஜனதா தளத்தின் எஸ்ஆர் பொம்மை முதல்வரானார். பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை எனக்கூறி அவரது அரசு கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தான் மக்களால் தேர்வு செய்யப்ட்ட ஆட்சியில் ஆளுநர்கள் தலையிட முடியாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஆட்சி கலைக்கப்பட்டதால் எஸ்ஆர் பொம்மை 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யவில்லை.

தேவேகவுடா: 1989 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்றது. மீண்டும் வீரேந்திர பட்டீல் முதல்வராக 7 மாதம் முதல்வராக இருந்தார். அதன்பிறகு பங்காரப்பா முதல்வராகி 2 ஆண்டு நீடித்தார். அதன்பிறகு வீரப்பமொய்லி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார். 1994 தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் தேவேகவுடா முதல்வரானார். 1996 ல் பிரதமர் வாய்ப்பு கிடைத்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜேஎச் படேல் முதல்வராக ஆட்சியை நிறைவு செய்தார்.
எஸ்எம் கிருஷ்ணா: 1999 தேர்தலில காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எஸ்எம் கிருஷ்ணா முதல்வரானார். இவர் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் பதவி காலம் முடிய 5 மாதம் இருக்கும்போதே தேர்தலை சந்தித்தார். இதனால் அவரும் முதல்வர் பதவியை நிறைவு செய்யவில்லை. மாறாக 2004ல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்தது.

குமாரசாமி-எடியூரப்பா: இதையடுத்து 2004ல் நடந்த தேர்தலில் தொங்கு சட்டசபை உருவானது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைந்தன. இதுதான் கர்நாடகாவின் முதல் கூட்டணி ஆட்சியாகும். இதில் 2004- 2006 வரை காங்கிரஸ் கட்சியின் தரம்சிங் முதல்வராக இருந்தார். இதையடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. ஜேடிஎஸ் பாஜகவுடன் கைகோர்த்தது. 2006-2007 வரை குமாரசாமி முதல்வராகவும் இருந்தார். அதன்பிறகு 20:20 மாதம் ஒப்பந்தப்படி ராஜினாமா செய்தார். எடியூரப்பா முதல்வராக 7 நாள் இருந்தபோது ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் எடியூரப்பாவின் அரசும் கவிழ்ந்தது.
எடியூப்பா-ஷெட்டரும் இதன் தொடர்ச்சியாக 2008ல் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா 3 ஆண்டு முதல்வராக இருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அவரது பதவி பறிபோனது. இதையடுத்து அடுத்த ஓராண்டு சதானந்தகவுடாவும், அதன்பிறகு ஓராண்டு ஜெகதீஷ் ஷெட்டரும் முதல்வராக இருந்தனர். இதன்மூலம் தேவராஜ் அரசுக்கு பின்னால் எந்த முதல்வரும் 5 ஆண்டு பதவியை நிறைவு செய்யவில்லை.

40 ஆண்டுக்கு பிறகு சித்தராமையா: இந்நிலையில் தான் 2013 தேர்தலில் காங்கிரஸ் வென்றது. சித்தராமையா முதல்வராக பதவியேற்று 2018 வரை 5 ஆண்டு நிறைவு செய்தார். தேவராஜ் அரசுக்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து சித்தராமையா முதல்வர் பதவியை முழுமையாக நிறைவு செய்தார். இதில் பியூட்டி என்னவென்றால் தேவராஜ் அரஸ் மற்றும் சித்தராமையா இருவரும் மைசூரை சேர்ந்தவர்கள். தேவராஜ் அரசு உன்சூர் தொகுதியிலும், சித்தராமையா வருணா தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
5 ஆண்டில் 3 முதல்வர்கள்: இதையடுத்து கடந்த 2018 தேர்தலில் மீண்டும் தொங்கு சட்டசபை உருவானது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசின் முதல்வராக ஜேடிஎஸ் குமாரசாமி இருந்தார். ஓராண்டில் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் எடியூரப்பா 2 ஆண்டும், பசவராஜ் பொம்மை 2 ஆண்டும் முதல்வராக இருந்தனர்.
சித்தராமையா வெல்வாரா?: இந்நிலையில் தான் தற்போது முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. இவர் இந்த முறை 5 ஆண்டு பதவியை நிறைவு செய்வாரா? இல்லாவிட்டால் தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தல் அல்லது இரண்டரை ஆட்சிக்கு பிறகு பாதியில் சித்தராமையாவின் முதல்வர் பதவி டிகே சிவக்குமாருக்கு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கான விடையை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications