குமாரசாமி அரசை கவிழ்த்தது நானா? எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் நானா? சீறும் சித்தராமையா
பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ வேண்டும் என்பதற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்களை தாம் ராஜினாமா செய்ய சொன்னதாக வெளியான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாக கடுமையாக மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசை கவிழ்த்ததன் பின்னணியில் பாஜக உள்ளது. அதேநேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை அழைத்து வருவதில் காங்கிரஸ் கட்சி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

காங்கிரஸின் சிவகுமார்தான் அதிருப்தி எம்.எல்.ஏக்களை மீட்க மும்பை வரை சென்று போராடினார். அத்துடன் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியதுதானே என குமாரசாமியை சித்தராமையா விமர்சித்த்தும் லீக் ஆனது.
இதனால் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்டதில் சித்தராமையாவும் உடந்தை என்கிற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இதைதிட்டவட்டமாக மறுத்து சித்தராமையா கூறியதாவது:
நான் ராஜினாமா செய்ய சொன்னதாக ராஜினாமா எம்.எல்.ஏக்கள் கூறியதாக ஊடகங்கள் எழுதுகின்றன. அந்த எம்.எல்.ஏக்கள் தங்களது நம்பிக்கை துரோகத்தை என் மீது பழியை போடுகின்றனர்.
மக்களிடையே அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. அதை திசைதிருப்ப என் மீது பந்தை தள்ளிவிடுகின்றனர். குமாரசாமி அரசு கவிழ்வதற்கு நான் காரணம் என்பது அப்பட்டமான அவதூறு.
இதையே மீண்டும் என்னிடம் கேள்வியாக கேட்டால் தக்கபதிலடி தருவேன். இந்த அவதூறுகளுக்கு எல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications