Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூடான சூடான் விவகாரம்.. "என்னாது, நான் அரசியல் செய்கிறேனா?'.. மத்திய அரசுக்கு சித்தராமையா சுளீர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கோரி வலியுறுத்தியதில் தாங்கள் எந்த அரசியலையும் செய்யவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த மோதல் போக்கானது தற்போது தீவிரமடைந்துள்ளது.

Siddaramaiah has said that he is not playing politics in the issue of rescuing Indians trapped in Sudan

கடந்த 11 நாட்களாக இரு தரப்பினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் தற்போது வரை சுமார் 400 பேர் வரை உயிரிழந்திருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. இதில் ஒரு இந்தியரும் அடக்கம். அதேபோல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். போரினால் பொதுமக்கள் உணவு, நீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள 3000க்கும் அதிகமான இந்தியர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கையை எழுப்ப தொடங்கினர்.

இதனையடுத்து கடந்த 21ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையையடுத்து இந்தியர்களை மீட்க விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இப்படியாகதான், 'ஆபரேஷன் காவிரி' உருவானது. இந்த திட்டத்தின்படி இந்தியர்களை மீட்க இரண்டு சி-13கே ரக போர் விமானங்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா ரக போர்க்கப்பலும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. முதற்கட்டமாக 278 பேர் சுமேதா கப்பல் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு அழைத்துவரப்படுகின்மறனர்.

பின்னர் இங்கு தயாராக இருக்கும் விமானம் மூலம் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுகின்றனர். முன்னதாக இந்தியர்களை மீட்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தபோது, 'காங்கிரஸ் சூடான் விவகாரத்தில் அரசியல் செய்கிறது' என்று மத்திய அரசு குற்றம்சாட்டியதாக சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த மீட்பு நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் காவிரி' என பெயரிடப்பட்டதே பெரும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்நிலையில் சித்தராமையா மீது பாஜக விமர்சித்திருந்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,

"நான் சூடானில் இருக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கூறியபோது இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்னை விமர்சித்திருந்தார். ஆனால் நான் மனிதாபிமானத்துடன்தான் கோரிக்கை வைத்தேன். இங்கு இதற்கு அப்பாற்பட்டு எதுவும் கிடையாது. அரசியலும் கூட" என்று சித்தராமையா கூறியுள்ளார். முன்னதாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சித்தராமையா "சூடானில் கர்நாடகாவை சேர்ந்த 31 பழங்குடி சமூகத்தினர் சிக்கியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த ஜெய்சங்கர், "போரில் சிக்கியுள்ளவர்கள் நிலையை அரசியலாக்குவது பொறுப்பற்ற செயல். எந்த தேர்தல் வெற்றியும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நியாயப்படுத்தாது. உங்கள் ட்வீட்டை கண்டு திகைத்துவிட்டேன். மனித உயிர்களை ஆபத்தில் இருக்கும் நிலையில் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+