எனக்கு முன் பேசட்டும்.. பார்த்துக்கொள்கிறேன்.. ராகுல் விமர்சனத்தை அடுத்து சித்தராமையா பாய்ச்சல்!
தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சித்தராமையா பதில் அளிக்க துவங்கி உள்ளார்.
Recommended Video
பெங்களூர்: தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சித்தராமையா பதில் அளிக்க துவங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் வரிசையாக டிவிட்களை செய்து அதிர்ச்சியை அளித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா விரைவில் முதல்வராக பதவி ஏற்க வாப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமியின் பதவி விலகலுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் சூழ்ச்சியும் காரணமாக இருப்பதாக கர்நாடக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. குமாரசாமி ஆட்சி கவிழ்வதற்கு ஏற்றபடி சித்தராமையா அரசியலில் நிறைய உள்ளடி வேலைகளை பார்த்தார் என்று விமர்சனம் எழுந்து வருகிறது.

ராகுல் காந்தி
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் - மஜத கூட்டணி உருவான நாளில் இருந்தே கர்நாடகாவில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பலர் இந்த கூட்டணிக்கு எதிராக காய் நகர்த்தினார்கள், சதி செய்தார்கள். சிலரின் பதவி ஆசைக்கு இந்த கூட்டணி இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதினார்கள். அவர்களின் பேராசை தற்போது வென்றுவிட்டது, என்று கூறினார்,

பெரிய வைரல்
அவரின் இந்த பேட்டி பெரிய வைரலானது. ராகுல் காந்தி மறைமுகமாக சித்தராமையாவைத்தான் விமர்சனம் செய்கிறார். சித்தராமையாவை குறிப்பிடும் விதமாகத்தான் அவர் இந்த பேட்டியை அளித்துள்ளார் என்று பலரும் குறிப்பிட்டார்கள். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே குழப்பம் ஏற்பட்டது.
|
என்ன சொன்னார்
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு தற்போது சித்தராமையாவே பதில் அளித்துள்ளார். அதில், சில சேனல்களில் நான்தான் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை பதவி விலக வைத்து ஆட்சியை கவிழ்த்தது போல பேசுகிறார்கள். இது முழுக்க முழுக்க பொய், தவறான எண்ணத்துடன் இப்படி செய்து வருகிறார்கள். யாராவது இதேபோல எனக்கு கண்ணுக்கு முன் சொன்னால், மிக சரியான பதிலடியை அவர்களுக்கு கொடுப்பேன்.
|
யார் எல்லாம்
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு எதிராக முதுகில் குத்தியது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தற்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் எல்லோரும் என் பக்கம் பழியை போட பார்க்கிறார்கள். எல்லாம் அடங்கிய பின் உண்மை வெளியே தெரியும் .
|
தவறான புகார்
எனக்கு எதிராக தவறான பொய்யான புகார்கள் நிறைய வைக்கப்படுகிறது. நான் முதல்வராக இருந்த போதும் கூட வைக்கப்பட்டது. இது முதல்முறை இல்லை, அதேபோல் கடைசி முறையும் கிடையாது. பிறரின் விஷத்தை எல்லாம் ஜீரணித்துதான் நான் மக்களுக்காக உழைத்து வருகிறேன் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications