கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம்! முதலமைச்சர் சித்தராமையா அதிரடி உத்தரவு! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
பெங்களூர்: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்ததை போலவே கர்நாடகாவிலும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்தன. இந்நிலையில், பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசோ இந்த கோரிக்கைகளை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மட்டுமல்லாது, பழைய ஓய்வூதிய திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என சிலவற்றை பட்டியலிட்டது.

அதாவது, இந்த திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை சுருக்க வேண்டியதாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 0.9 சதவிகிதம் குறையும், செலவுகள் 4.5 மடங்கு அதிகரிக்கும் என்று பட்டியலிட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கையில் விடாபிடியாக இருந்தனர்.
காரணம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது ஊதியத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். அதேபோல இந்த ஓய்வூதியம் பெறும் நபர் உயிரிழந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்கு பின்னர் வழங்கப்படும் நிதிக்காக, அவர் வேலை பார்க்கும் காலத்தில் அவரது சம்பளத்திலிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படாது. ஓய்வூதிய தொகை முழுக்க முழுக்க அரசு கருவூலத்திலிருந்து வழங்கப்படும். மட்டுமல்லாது 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி கணக்கீட்டின்படி ஒய்வூதியம் உயர்த்தப்படும். இது எதுவும் புதிய திட்டத்தில் கிடையாது
இந்நிலையில் கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications