நாங்கெல்லாம் மோடி பிறப்பதற்கு முன்பே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியவர்கள்.. சித்தராமையா
பெங்களூர்: மோடி பிறப்பதற்கு முன்னரே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியவர்கள் காங்கிரசார் என கர்னாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பி,டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கர்னாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் பிரச்சாரங்களில் மோடி பெண்களை குறித்தோ, விவசாயிகள் குறித்தோ, அல்லது வேலையின்மை குறித்தோ பேசுவதில்லை மாறாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து மட்டுமே பேசுகிறார். கடந்த காலங்களில் 12 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்துள்ளது. 1948-49- ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது மோடி பிறந்திருக்க கூட மாட்டார். அப்போதே காங்கிரஸ் கட்சி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது.

1977 -ம் ஆண்டு இந்திரா பிரதமராக இருந்தபோது வங்க தேசம் தனியாக பிரிக்கப் பட்டது. அப்போதெல்லாம் மோடி எங்கு சென்றிருந்தார்? அப்போது மோடி ராணுவத்தில் சிப்பாயாக இருந்தாரா என்று கேள்வி எழுப்பிய சித்தராமையா நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவ்வப்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்து கொண்டேதான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த தேர்தலில் மோடி அலை என்று ஒன்றும் இல்லை. மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரும் மனநிலையில் உள்ளனர். மதவாத பிரிவினை சக்திகளை மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தனித்தனியே 150 இடங்களை தாண்டும் ஆனால் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதே வேளையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறும். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்.
மோடி தற்போது ஆர் எஸ் எஸ் எஸ் சின் சின்னமாக உள்ளார். மோடியை தாக்கிப் பேசினால் அது ஆர் எஸ் எஸ் எஸ் ஐ தாக்கிப் பேசுவது போலாகும் என்றும் சித்தராமையா கூறினார்
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications