Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜக அவ்வளவு தான்.. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்! அடுத்து லோக்சபா தேர்தல் தான்!" சித்தராமையா பரபர

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே தேர்தல் முடிவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போதே யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

Siddaramaiah says Karnataka Win in Stepping Stone For Lok Sabha Election

தற்போது வரை காங்கிரஸ் 115க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக சுமார் 75 இடங்களிலும், மஜத சுமார் 30 தொகுதிகளிலும் வகிக்கிறது பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதைக் காங்கிரஸ் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்தாண்டு காங்கிரஸ் ஹிமாச்சலில் ஆட்சியை அமைத்த நிலையில், இப்போது அவர்கள் கர்நாடகாவிலும் ஆட்சியை அமைக்கின்றனர். இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. இதைக் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக மக்கள் திரண்டு உள்ளனர் என்பதையே காட்டுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது.

இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுக்கு எதிரான வெற்றி.. அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்கலாம். அவர்களால் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க முடியலாம். ஆனால், அவர்களால் மக்களின் நம்பிக்கையை வாங்க முடியாது. கர்நாடகாவில் மதச்சார்பின்மை பாஜகவால் ஆபத்தில் இருந்தது. மாநிலத்தில் வெறுப்பு அரசியல் இருந்தது, அதைக் கர்நாடக மக்கள் ஏற்கக் கொள்ளவில்லை.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 130 இடங்களைத் தாண்டும்.. இந்த அமோக வெற்றி தனிப்பெரும்பான்மையை பெறக் காரணமாக இருக்கும்.. இது ஒரு பெரிய வெற்றி. பாஜக ஆட்சியில் மக்கள் கோபத்தில் உள்ளனர். பாஜக எப்படி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் தொடக்கம். தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். மத்தியில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக ஆட்சியே தேவை.

Siddaramaiah says Karnataka Win in Stepping Stone For Lok Sabha Election

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தீவிர பிரச்சாரமும் வெற்றிக்கு முக்கிய காரணம். அது கட்சி தொண்டர்களையும் வாக்காளர்களையும் உற்சாகப்படுத்தியது. குறிப்பாக அவரது பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிக்குப் பெரியளவில் உதவியது. தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு அளித்த மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் நன்றி" என்றார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பதில் இப்போதே போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா, டிகி சிவக்குமார் என இருவருமே முதல்வர் ரேஸில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+