Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூதாகரமாக வெடிக்கும் முடா விவகாரம்.. நேரில் விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாைவுக்கு முடா வழக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சித்தராமையா மனைவி பார்வதியிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்திய இருந்த நிலையில், இப்போது சித்தராமையாவும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உள்ளது.. இந்த முடா வாரியம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது பூதாகரமாக வெடித்துள்ளது.

siddaramaiah muda scam

முடா முறைகேடு: முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது.

இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

சம்மன்: முன்னதாக கடந்த அக். 25ம் தேதி தான் சித்தராமையாவின் மனைவி பார்வதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இப்போது அம்மாநில முதல்வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகிய மீது மட்டுமின்றி சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் பெயர்களும் லோக் ஆயுக்தா போலீஸ் கடந்த செப். மாதம் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ. 6ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இது குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா திட்டமிட்டுள்ளது. வீட்டு மனை ஒதுக்கீடு குறித்தும் அதில் இருக்கும் புகார்கள் குறித்தும் விளக்கம் கேட்க அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக. 29ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக முடா கமிஷனராக இருந்த டிபி நடேஷ் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவரும் விசாரணைக்கு கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

மறுப்பு: அதேநேரம் தனது மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா திட்டவட்டமாக மறுத்தே வருகிறார். எதிர்க்கட்சிகள் தன் மீதும் தனது அரசு மக்களுக்குச் செய்து வரும் நலத்திட்டங்களைக் கண்டும் பயந்து போய் இருப்பதாகவும் இதனால் தன்னை ஒடுக்கவே இந்த வழக்கைத் திட்டமிட்டுப் போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட வழக்கு இது என்று விமர்சித்த சித்தராமையா தனது மனைவிக்குச் சொந்தமான இடத்தை முடா வாரியம் எடுத்துக் கொண்டதாலேயே அதற்கு இழப்பீடாகவே இந்த 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

என்ன பிரச்சினை: சிக்கலே இந்த இடத்தில் தான்.. அதாவது முடா வாரியம் எடுத்த நிலத்தின் மதிப்பிற்கும் இழப்பீடாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பும் வெவ்வேறு இருக்கிறது என்பதே புகாராகும். புறநகரில் ஒரு கிராமத்தில் இருந்த இடத்திற்கு பதிலாக மைசூரில் முக்கிய இடத்தில் பார்வதிக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதே புகாராகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+