பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுங்க.. பிரதமருக்கு சித்தராமையா அவசர கடிதம்!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி மஜத கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆகியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமாவார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக ஷேர் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்கக் கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு மாநில மகளிர் ஆணையத் தலைவர் டாக்டர் நாகலட்சுமி சௌத்ரி கடிதம் எழுதியிருந்தார்.

அதேபோல சோஷியல் மீடியாவில் ஷேரான வீடியோவில் உள்ள பெண், தான் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022 வரை பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மகளிர் ஆணைய தலைவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ரேவண்ணா மீதான வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு ஒப்படைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், மஜத கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. நேற்று கர்நாடகாவில் பல இடங்களில் மகளிர் காங்கிரஸார் பிரஜ்வலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆனால் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இப்படியாக நிலைமை சீரியஸானதையடுத்து மஜத கட்சியிலிருந்து பிரஜ்வல் நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், பிரஜ்வலுக்கு வழங்கப்பட்டிருக்கும் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
அதில், "பிரஜ்வல் மீதான பல பெண்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. எனவே அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர் நம் நாட்டின் சட்ட திட்டத்தின்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் வெளிநாட்டுக்கு செல்ல தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசாவை மத்திய அரசுதான் கொடுக்கிறது. எனவே மத்திய அரசுக்கு தெரியாமல் அவரால் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியுமா?
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் திட்டமிட்டு பிரஜ்வலை வெளிநாட்டிற்கு தப்ப வைத்திருக்கிறார். பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக ஏன் தேர்தலில் பிரஜ்வலுக்கு ஆதரவளித்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரண பாஸ்போர்ட் அடர் நீல நிறத்தில் இருக்கும். ஆனால், தூதரக பாஸ்போர்ட் எனப்படும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். இந்த பாஸ்போர்ட் எளிதாக எல்லோருக்கும் வழங்கப்படாது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முடிவின்படிதான் இந்த தூதரக பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விஐபிகளாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications