பெங்களூரில் கொடூரம்! 6 வயது சிறுமி என்று கூட பாராமல்.. நடந்த அநியாயம்! மக்கள் கொந்தளிப்பு
பெங்களூர்: நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இருப்பினும் குற்றங்கள் குறையவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், மொத்த கர்நாடகாவையும் உலுக்கியிருக்கிறது.
பெங்களூர், தென் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பின் மையமாக இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மட்டுமல்லாது, ஒடிசா, மேற்கு வங்கம் என வட மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு புலம் பெயர்ந்து வந்து வேலை செய்கின்றனர். எனவே குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

போலீஸ் நடவடிக்கை
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பெங்களூர் போலீஸ் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெங்களூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெளியே பிங்க் ஹோய்சாலா போலீஸ் ரோந்து வாகனங்கள் எப்போதும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர, சுரக்ஷா செயலியும் பெண்களின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படுகிறது. இப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், குற்றங்கள் முழுமையாக குறைந்தபாடில்லை.
சிறுமி கொலை
அந்த வகையில் பெங்களூரில், 6 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் உள்ள பட்டந்தூர் அக்ரஹாரம் பகுதிக்கு அருகில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள புலம்பெயர் தொழிலாளர் குடியிருப்பில், 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
புகார் கொடுத்த தந்தை
சிறுமியின் தந்தை, கடந்த 5ம் தேதி பிற்பகல் முதல் தனது மகளை காணவில்லை என்று, நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் யூசுப் எனும் மற்றொரு, புலம்பெயர் தொழிலாளி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். புகார் அளித்தவரும், குற்றம்சாட்டப்பட்ட நபரும் பழைய பொருட்களை சேகரித்து இரும்பு கடையில் எடைக்கு போடும் வேலையை செய்து வந்திருக்கின்றனர்.
சிறுமியின் சடலம்
புகாரை தொடர்ந்து காவல்துறை சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் இன்று, அக்ரஹாரம் பகுதிக்கு அருகில் உள்ள சாக்கடையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். சிறுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
பிரேத பரிசோதனை
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனையின் அறிக்கையில்தான் உண்மை தெரிய வரும். இந்த வழக்கில் சந்தேக நபர் தப்பியோடி உள்ளார். அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 6 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பெங்களூரில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளை அதிகரித்திருக்கிறது.
-
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications