கர்நாடகா: வெல்வது யார்? டெல்லி, குஜராத்தில் துல்லியமாக கணித்த நிறுவனத்தின் ‘போல் ரிசல்ட்’ இதுதான்!
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ஸ்மால் பாக்ஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு பல்வேறு மாநில தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்துள்ளது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், லாப நோக்கற்ற வகையில் செயல்படும் ஸ்மால் பாக்ஸ் இந்தியா கருத்துக்கணிப்பு நிறுவனம் கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதன் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ஸ்மால் பாக்ஸ் இந்தியா நிறுவனம்.

கர்நாடகா தேர்தல்
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

காங்கிரஸ் - மெஜாரிட்டி
2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது ஸ்மால் பாக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 118-129 இடங்களில் வெல்லும் என்றும், பாஜக 65-70 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் 28-32 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மற்றவர்கள் 1-3 இடங்களைப் பிடிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வோட் ஷேரிங்
கர்நாடக சட்டசபை தேர்தலில் கட்சி வாரியாக ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் ஸ்மால் பாக்ஸ் இந்தியா கருத்துக்கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 41% வாக்குகளும், பாஜகவுக்கு 36% சதவீத வாக்குகளும்,
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 18% வாக்குகளும், மற்றவை 5% வரை வாக்குகளைப் பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக கணித்த நிறுவனம்
இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ள ஸ்மால் பாக்ஸ் இந்தியா கருத்துக்கணிப்பு நிறுவனம், சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநில தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்திருந்தது. அதற்கு முன்னதாக குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளையும், டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளையும் முன்கூட்டியே துல்லியமாகப் கணித்திருந்தது. இந்த நிறுவனத்தின் கணிப்பு கர்நாடகா தேர்தலிலும் உண்மையாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications