பெங்களூரில் வெள்ளத்திற்கு காரணமே "இவங்கதான்"! பொங்கும் சமூக செயற்பாட்டாளர்கள்.. பரபர பின்னணி
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் தலைநகரம் பெங்களூர் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளுக்கு நில ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்னிந்தியாவில் ஒரு சில நகரங்கள்தான் இயற்கையிலேயே மழைநீர் வடிகால் அமைப்பை பெற்றிருக்கும். அப்படியான சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றுதான் பெங்களூர்.
ஆனால் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் குடிநீருக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.

குற்றச்சாட்டு
பெங்களூரு இவ்வாறு பாதிக்கப்பட்டது பல விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. தற்போது அந்த வகையில் மற்றொரு விவாதமும் மேலெழுந்திருக்கிறது. அதாவது, இந்த வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் நில ஆக்கிரமிப்புகள்தான். குறிப்பாக நீர் நிலை ஆக்கிரமிப்புகள்தான் என 'சுற்றுச்சூழல் ஆதரவு குழுவின்' (Environment Support Group) ஒருங்கிணைப்பாளர் லியோ எஃப் சல்டான்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

நில ஆக்கிரமிப்பு
நில மாஃபியாக்களின் அத்துமீறல்கள் மற்றும் அரசாங்கத்தின் சில சொந்த நலன்கள் ஆகியவை ஒன்றிணைந்து நகரத்தின் நீர் நிலைகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு வந்துவிட்டதாக சல்டான்ஹா குற்றம்சாட்டியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "ஆங்கிலேயர் காலத்தில் பெங்களூர் ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்பட்டது. இங்கு சுமார் 1,600 ஏரிகள் இருந்தன. ஆனால் தற்போது 400 என சுருங்கிவிட்டது. இதற்கு அதீத நில ஆக்கிரமிப்புதான் காரணம்"

ஏரிகள் அழிப்பு
"தற்போது உள்ள இந்த 400 ஏரிகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. இதற்கு மிகப்பெரிய உதாரணம், சுப்ரமணியபுரா ஏரிதான். ஏனெனில் இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகர்வாழ் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. மக்கள் இந்த தண்ணீரை தங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த ஏரி கழிவுநீர்க் குளமாக மாற்றப்பட்டுவிட்டது. பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (Bangalore Development Authority) இந்த ஏரியையொட்டியுள்ள 'வெங்கடராயனகெரே' ஏரியின் மீது ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.

சாக்கடைகளாக மாறிய ஏரிகள்
அதாவது இந்த ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களை மறித்து அந்த பகுதிகளில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. பெங்களூர் பெருநகரப் பகுதியின் குடிமை வசதிகள் வாரியம் (Bruhat Bengaluru Mahanagara Palike) இந்த ஏரிகளுக்கு நீரை கொண்டுவரும் கால்வாயின் அளவை 60 அடியில் இருந்து 10 அடியாக குறைத்துவிட்டது. தற்போது இந்த 10 அடி அகல கால்வாய் கூட மழை நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்வதில்லை. மாறாக சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளின் கழிவுகளை விருஷபாவதி ஆற்றுக்கு கொண்டு செல்கிறது." என்று சல்டான்ஹா கூறியுள்ளார்.

புதிய கட்டுமானங்கள்
இந்த சுப்ரமணியபுரா ஏரியின் 2 கி.மீ சுற்றளவில் சிக்கலசந்திரா ஏரி, இட்டமடு ஏரி, நாராயணகெரே ஆகிய ஏரிகள் உள்ளன. ஆனால் இந்த ஏரிகளை ஆக்கிரமித்து நில ஆக்கிரமிப்பாளர்கள் புதிய குடியிருப்புகளை அமைத்துவிட்டனர். குறிப்பாக மாநகராட்சியின் குப்பை வாகனங்கள் பல இந்த ஏரிகளில்தான் வந்து குப்பைகளை கொட்டுகின்றன என சிக்கலசந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ஏராளமான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இப்படியான ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கைகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐடி நிறுவனங்கள் பல நட்டத்தை எதிர்கொண்டன. இதற்கெல்லாம் மேலாக உயிரிழப்புகளும் சில ஏற்பட்டன. எனவே இனி வரும் காலங்களில் இதனை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே பொருத்தமாக இருக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications