Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக நீதி! மாநில உரிமை! தேசிய அளவில் காங்கிரசுக்கு வெற்றி தரும் "திராவிட மாடல்"! விழி பிதுங்கிய பாஜக

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. வரிசையாக அடுத்தடுத்து காங்கிரஸ் மாநில தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. காங்கிரசின் இந்த வெற்றிக்கு அவர்களின் திராவிடம் சார்ந்த கொள்கை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 123 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Social Justice + State politics + Woman Freedom: How Dravidian idealogy is helping Congress national level?

அங்கே காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து உள்ளது. 123 இடங்களை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ்:அங்கே காங்கிரசின் வெற்றிக்கு சமூக நீதி + பெண் விடுதலை + மாநில உரிமை ஆகிய திராவிட மாடல் கொள்கைகள் முக்கிய காரணமாக மாறி உள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரசும் கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. அதை கர்நாடகாவும் பின்பற்றி உள்ளது.

அதிலும் இதில் தமிழ்நாட்டை சித்தராமையா நேரடியாக எடுத்துக்காட்டி உள்ளார்.

சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

Social Justice + State politics + Woman Freedom: How Dravidian idealogy is helping Congress national level?

மாநில சுயாட்சி:தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாநில சுயாட்சி பற்றி பேசும் நிலையில், கர்நாடகாவிலும் காங்கிரஸ் இதை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வரி பங்கீட்டில் கர்நாடகாவிற்கு பெருவாரியான பங்கீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.

இது தமிழ்நாட்டில் திமுக வைத்து வரும் கோரிக்கை ஆகும். இதே விஷயத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

பெண் உரிமை:கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ2,000 வழங்கப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம்.

இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் கையில் எடுத்து உள்ளது.

Social Justice + State politics + Woman Freedom: How Dravidian idealogy is helping Congress national level?

திராவிட மாடல்:அதேபோல் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி அங்கே அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரோல் மாடலாக திகழும் திட்டங்களை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளது.

தேசிய மாடல்:முன்னதாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கேயும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.

பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

தேசிய அளவில் ஏற்கனவே ஆம் ஆத்மி திமுகவின் வாக்குறுதிகளை பின்பற்றி வரும் நிலையில்தான் தற்போது சமூக நீதி திட்டங்கள் கர்நாடகாவிலும் கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+