இது ஜெயிலா.. இல்லை சொகுசு பங்களாவா? டிவி - செல்போன்களுடன் பயங்கரவாதி டூ கொலையாளி வரை என்ஜாய்
பெங்களூர்: பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள பயங்கரவாதி, கொலை குற்றவாளியும், பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உள்பட பல கைதிகள் சொகுசு வசதிகளை அனுபவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர்கள் செல்போன் பயன்படுத்துவதும், தொலைக்காட்சிகளை பார்த்து சிறையில் என்ஜாய் செய்த நிலையில் அவர்களின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கையை வாழ்வதாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடியோக்கள் வெளியாகி சில ஆண்டுகளுக்கு முன்பு விவாதத்தை கிளப்பியது.

மேலும் ரசிகர் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் வழங்கியதாக வீடியோ, போட்டோக்கள் வெளியாகின. அதேபோல் கொலை வழக்கில் கைதான ரவுடி சீனிவாஸ் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும் வெளியானது.
அந்த வரிசையில் தற்போது புதிய வீடியோ வெளியாகி உள்ளது. நடிகை ரன்யா ராவ் உடன் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு என்று கைதான நடிகர் தருண், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த ஜூஹாத் ஹமீத் ஷகீல் மன்னா, தொடர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான உமேஷ் ரெட்டி உள்ளிட்டவர்கள் செல்போன்களை பயன்படுத்தி உள்ளனர். மேலும் சிறை அறையில் உள்ள டிவியின் அருகே இருந்து போன் பேசும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இதில் ஜூஹாத் ஹமீத் ஷகீல் மன்னா என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். இவர் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்தார். குரான் சர்க்கிள் குரூப் என்ற பெயரில் இளைஞர்களை பயங்கரவாதியாக மாற்றி வந்தள்ளார். அவர்களை துருக்கி வழியாக சிரியாவுக்கு அனுப்பி உள்ளார்.
குறிப்பாக சிரியா தொடர்பான வீடியோக்களை இளைஞர்களிடம் காண்பித்து அங்கு நடக்கும் அட்டூழியங்களை தடுக்க வேண்டும் என்று ‛மோட்டிவேட்’ என்று இளைஞர்களின் மனதை மாற்றி உள்ளதாக என்ஐஏ சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையிலும் ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தி இருப்பதால் அவர் தொடர்ந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்பதால் அதுபற்றியும் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொருவரான உமேஷ் ரெட்டி மீது மொத்தம் 18 பேரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு உள்ளது. இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அவர் கருணை மனு செய்த நிலையில் தண்டனை குறைக்கப்பட்டது. 30 ஆண்டு சிறை தண்டனையுடன் அவர் பெங்களூர் சிறையில் உள்ளார். இவர் ஆண்ட்ராய்டு மற்றும் சாதாரண பட்டன் செல்போன்களை பயன்படுத்துவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதனை பார்க்கும் பலரும் இது சிறையா? இல்லை சொகுசு விடுதியா? என்று கேள்வி கேட்டுள்ளனர். இது சர்ச்சையான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ‛‛ சிறையில் விதிமீறலுக்கு இடமில்லை. விதியை
மீறி யார் செயல்பட்டு இருந்தாலும் பொறுத்து கொள்ள முடியாது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடக்கும் சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் வரும்காலத்தில் அதனை ஜெயில் என்று கூற முடியாது. சீனியர் அதிகாரிகளை மீட்டிங்கிற்கு அழைத்துள்ளேன். இந்த விஷயத்தில் சீரியஸாக கருதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட உள்ளேன்.
அதேபோல் இன்னொரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. போலீஸ் அதிகாரிகளின் அறிக்கை சரியாக இல்லாவிட்டால் அந்த கமிட்டி தனியாக விசாரித்து அறிக்கை வழங்கும். சிறையில் பயங்கரவாதி மட்டுமில்லை யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. துணைபோன அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் பி தயானந்தை நியமித்துள்ளோம். அவர் நேற்று விடுப்பில் சென்றிருந்தார். அவரிடம் பேசி அறிக்கை கேட்டுள்ளேன்'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications