24 எதிர்கட்சிகளின் மாபெரும் கூட்டணி! தலைவியாகும் சோனியா? நிதிஷ், ஸ்டாலினுக்கு முக்கிய பதவி.. அடிதூள்
பெங்களூர்: பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி ஆலோசனை நடந்து வரும் நிலையில், புதிய கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று பெங்களூரில் நடக்க உள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் கட்டமாக இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டு விருந்திற்கு இடையே சிறிய அளவிலான ஆலோசனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
இன்று நடக்கும் கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
24 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
தலைமை: பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி ஆலோசனை நடந்து வரும் நிலையில், புதிய கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு இல்லை.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கான தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணிக்கு புதிய பெயர் விரைவில் தேர்வு செய்யப்படலாம். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பிரதமர் வேட்பாளராக எதிர்காலத்தில் நிதிஷ் குமார் தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோருக்கு கூட்டணியின் குழுவின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான குறைந்தபட்ச திட்ட அறிக்கை, எப்படி கட்சிகளை ஒன்று இணைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications