கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம்.. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை மீது விவாதம்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. கர்நாடகாவில் கடந்த 11 ஆம் தேதி சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த சித்தராமையா சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக அப்போது இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அறிக்கையினை கடந்த ஆண்டு ஜெயபிரகாஷ் ஹெக்டே முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார். ஆனால் அந்த அறிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த 11 ஆம் தேதி நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் இந்த அறிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. மாறாக அனைத்து அமைச்சர்களுக்கும் இதன் நகல் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர்கள் இதனை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் அப்போதே இன்று கர்நாடக சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது இதன் மீதான விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று கர்நாடகாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக விவாதிக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை தவிர வேறு எந்த ஒரு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படாது என்றும் கூறப்பட்டிருந்தது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications