"ஜோடிக்கிளி" எங்கே சொல்லு, சொல்லு.. கைவிட்டு போச்சே.. ஹைலைட் இதுதான்.. ரூ.50 ஆயிரம் அறிவித்த தம்பதி
மிஸ் ஆன சாம்பல்கிளிகளை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூர்: கிளியை கண்டுபிடித்து தந்தால், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தம்பதியரின் நூதன அறிவிப்பு, கர்நாடக மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விலங்குகள், பறவைகள் போன்ற ஜீவராசிகளின் மீதான பாசத்துக்கு எல்லையில்லை.. இவைகளை வீட்டில் வைத்து வளர்த்து வரும் நிலையில், திடீரென சில சமயங்களில் காணாமல் போய், கலக்கத்தை தந்துவிடும்.
வீட்டில் உள்ளவர்கள் தொலைந்து போனால், எப்படி கவலைப்படுவார்களோ, அதுபோலவே, இந்த வாயிலா ஜீவன்கள் தொலைந்து போனாலும், வளர்ப்பவர்களும், உரிமையாளர்களும் கண்ணீர் சிந்திவிடுவார்கள்.

கிரினி கிளி
சில மாதங்களுக்கு முன்புகூட, ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அமீன் என்பவர் பறவைகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.. பல பறவைகளுடன் வெளிநாட்டு வகை கிளிகளையும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்... அதிக விலை கொடுத்து, கிரினி கிளியை வாங்கி வளர்த்துள்ளார்.. இந்த கிளி திடீரென காணாமல் போய்விட்டது.. இதனால் நிலைகுலைந்துபோன அமீன், போலீசில் புகார் தந்தார்.. கிரினி கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.. மேலும், கிளியை கண்டுபிடித்து தருமாறு, நோட்டீஸ் அச்சடித்தும் ஊர் முழுக்க அழுதுகொண்டே ஒட்டி வந்தார்..

பச்சைக்கிளி
கிளி காணாமல் போனது முதல், அமீன் சாப்பிடவில்லை.. தூங்கவில்லை. இதற்குபிறகு அந்த கிளி அமீனுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை... இப்போது கர்நாடகாவிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. துமகூரில் உள்ள ஜெயநகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் - ரஞ்சனா தம்பதியினர்.. இவர்கள் ஒரு ஜோடி கிளியை கடந்த 3 வருடங்களாக வளர்த்து வந்துள்ளனர்... அது ஆப்பிரிக்கன் வகையை சேர்ந்ததாம்.. இந்த கிளிகள் மீது அளவுக்கு அதிகமான பாசத்தை பொழிந்தனர்.. வருடந்தோறும் இந்த கிளிகளுக்கு பிறந்த நாள் விழாவையும் நடத்தி வந்தனர்...

போட்டோக்கள்
இந்நிலையில், ஆண் கிளியான ருஸ்துமா, கடந்த 16-ந்தேதி திடீரென காணாமல் போய்விட்டது.. ஊரெல்லாம் அந்த கிளியை, ரஞ்சனா தம்பதியினர் தேடினர்.. எங்குமே கிடைக்கவில்லை.. அந்த கிளி கடைசிவரை திரும்பி வராததால் கண்ணீர் விட்டு அழுதனர்... அவர்களால் சாப்பிட முடியவில்லை.. கிளியை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, காணவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.. ருஸ்துமா கிளியின் போட்டோக்களை போஸ்டர் அடித்தும், பேனர் வைத்தும் ஒட்டி வருகிறார்கள்.. மேலும் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

சாம்பல் கிளிகள்
ருஸ்துமாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர். 4 நாட்களாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. கிளி கிடைக்கவே இல்லை.. ஆண் கிளி இல்லாததால், கூண்டுக்குள் பெண் கிளி தவியாய் தவித்து வருகிறது... எந்நேரமும் இரைச்சல் இட்டு கொண்டே இருக்கிறது.. இந்த ருஸ்துமா, ஆப்பிரிக்காவை சேர்ந்ததாம்.. இதுபோன்ற சாம்பல் கிளிகள் மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை என்றும், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் இந்த கிளிகள்தான் பரவி கிடக்கின்றன என்றும் சொல்வார்கள்..

ஹைலைட்
கிளி வகைகளிலேயே மிகப்பெரியது இதுதானாம்.. பார்ப்பதற்கு நம்மூர் பச்சை கிளி போல இருக்காது.. வெள்ளி இறகுகள், ஒரு வெள்ளை முகம், சிவப்பு நிற வால் கொண்டு ஸ்பெஷல் தோற்றத்துடன் காணப்படுமாம்.. மற்ற கிளிகளை காட்டிலும், இந்த கிளிகளுக்கு இறகுகள் பிரகாசமாக இருக்குமாம்.. அதைவிட ஹைலைட், 5 வயது குழந்தைக்கு இருக்கும் அளவுக்கு, இந்த கிளிகள் அறிவாற்றல் நிறைந்தவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. அவ்வளவு சிறப்பு வாய்ந்த கிளிதான் காணாமல் போயுள்ளது.. பெண் கிளியும் இப்போது நிம்மதி இல்லாமல் துடித்து கொண்டிருக்கிறது.. அந்த ருஸ்துமாவை யாராவது பார்த்தீங்களா?!












Click it and Unblock the Notifications