பெங்களூர் சிறையிலிருந்து வி.என். சுதாகரன் இன்று விடுதலை.. அடுத்தது என்ன?.. பரபரக்கும் மன்னார்குடி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வி.என்.சுதாகரன் இன்று வெளியாகிறார். அவரை அழைத்துவர அவரது உறவினர்கள் சிறைச் சாலைக்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சசிகலா, இளவரசி ஆகியோர் செலுத்திவிட்டனர். இதனால் இருவரும் விடுதலையாகிவிட்டனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அதே நேரத்தில் இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விடுதலை நாள் அன்று இருவரும் மருத்துவமனையில் இருந்தபடியே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் மட்டும் ரூ 10 கோடி அபராதம் செலுத்தவில்லை.

முன்கூட்டியே விடுதலை

முன்கூட்டியே விடுதலை

இதனால் வி.என்.சுதாகரன் மட்டும் சிறையிலிருந்தார். அவரால் அபராதத் தொகையை செலுத்த முடியாததால் நீதிமன்ற உத்தரவின்படி மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்கள் கழிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.

ஆடம்பரம்

ஆடம்பரம்


அதன்படி சிறையில் இருக்கும் சுதாகரன் இன்றைய தினம் வெளியே வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரை அழைத்து செல்ல பெங்களூரில் அவரது உறவினர்கள் முகாமிட்டுள்ளார்கள். சுதாகரன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ததும் அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதும் நினைவுக்கூரத்தக்கது.

சகஜ நிலை

சகஜ நிலை

அபராதத் தொகை தனக்கும் செலுத்தி உதவாமல் அவர்கள் இருவரும் மட்டுமே விடுதலையானதால் சுதாகரனுக்கு அவர்கள் மீது கோபம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்று வெளியே வந்திருக்கும் அவர் சசிகலா, இளவரசியுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பாரா இல்லை சகஜ நிலைக்கு திரும்புவாரா என தெரியவில்லை. இன்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா சென்றார். சுமார் 4 ஆண்டுகள் கழித்து அவர் முதல்முறையாக சென்றார். நாளை அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இனி அதிமுகவில் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+