15 ஆண்டுகளுக்கு முன்பு... 20 கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அர்ஜூன் மீது துணை நடிகை புகார்
Recommended Video

பெங்களூர்: நடிகர் அர்ஜூன் தன் தோழிகளிடம் தவறாக நடந்ததாக துணை நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
மீ டு விவகாரம் பெரும் சூடு பிடித்து வருகிறது. இதன் மூலம் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நடிகர் அர்ஜூன் மீது நிபுணன் பட ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார்.

கன்னட நடிகை
இந்த நிலையில் தனக்கும் தனது தோழிகளுக்கும் நடிகர் அர்ஜூன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
[இறுக்கி அணைத்தார்.. தனியாக அவர் அறைக்கு வருமாறு டார்ச்சர் செய்தார்.. அர்ஜூன் மீது ஸ்ருதி பரபர புகார்]

15 ஆண்டுகளுக்கு முன்பு
அதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனடு என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்து கொண்டேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதி நேர அடிப்படையில் நடித்து கொடுத்தனர்.

தவறாக நடந்த அர்ஜூன்
அப்போது அர்ஜூன் என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்களை கேட்டார். மேலும் ஒரு ஹோட்டல் அறையின் எண்ணை கொடுத்து அங்கு வருமாறு என்னிடமும் என் தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள் பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.

படப்பிடிப்புக்கு மறுப்பு
அந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சுதீப், உபேந்திரா ஆகியோர் நடித்த போதிலும் எங்களுக்கு அர்ஜூனால் மட்டுமே இது போன்ற பாலியல் தொல்லைகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திக் கொண்டோம் என்று துணை நடிகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications