பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆணுறை".. இப்படி எங்காச்சும் நடக்குமா.. "காண்டம்" வாங்க வயது நிர்ணயமா? தகித்த மாநிலம்.. இதோ விளக்கம்

கர்நாடகா பள்ளி மாணவர்களை வழிநடத்துவதில் அரசு அடுத்தக்கட்ட யோசனையில் இறங்கி உள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்தடுத்து கிளம்பிய பரபரப்புகளையடுத்து, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், அதற்குரிய உரிய விளக்கத்தை அளித்து வருகின்றனர். அத்துடன் மாணவ சமுதாயத்தை வழிநடத்துவது குறித்த விவாதங்களும் ஆரம்பமாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான ஒரு செய்தி, ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்தது.. அங்குள்ள சில பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக புகார் எழுந்தது..

இந்த புகாரையடுத்து, புகார் வந்த பள்ளிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. அப்படித்தான், அங்கு செயல்பட்டு வரும் கேஏஎம்எஸ் பள்ளியிலும் சோதனை நடத்தப்பட்டது.

மக்களே உஷார்.. ப்ளேவர் பார்த்து ஆணுறை வாங்க கூடாது.. என்ன பிரச்சினை வரும் தெரியுமா? எச்சரிக்கைமக்களே உஷார்.. ப்ளேவர் பார்த்து ஆணுறை வாங்க கூடாது.. என்ன பிரச்சினை வரும் தெரியுமா? எச்சரிக்கை

 ஒயிட்னர்கள்

ஒயிட்னர்கள்

ஆனால், செல்போன்கள் தவிர, அந்த மாணவர்களின் பைகளில் ஆணுறைகள் இருந்ததை பார்த்து அதிகாரிகளும், அந்த பள்ளி ஆசிரியர்களும் அதிர்ந்துபோய்விட்டார்கள்.. அதுமட்டுமல்ல, அந்த பைகளில் வாய்வழி கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள், ஒயிட்னர்கள், ஏகப்பட்ட பணம் போன்றவைகள் இருந்ததை பார்த்து திகைத்து நின்றனர்.. இவ்வளவும், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்ததுதான் பலரையும் உறைய வைத்தது.. உடனடியாக இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர்கள் சந்திப்பு நடந்தது.. நடந்த சம்பவத்தையெல்லாம் கேட்டு பெற்றோர்களே வாயடைத்து போனார்கள்..

லைட்டர்கள்

லைட்டர்கள்

குழந்தைகளின் திடீர் நடத்தை மாற்றங்கள் குறித்தும் பெற்றோர்கள் அந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.. எனினும், சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்வதற்கு பதிலாக, அந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பெற்றோர்களிடம் பரிந்துரைக்கப்பட்டது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு தரப்பிலும் இருந்து கலவையான ஆட்சேபக் குரல்களும் எழுந்தன... அதிகாரிகளின் இந்த சோதனைகளுக்கு பின்னணி காரணம் உண்டு. நம் நாட்டில் வளர்ந்த நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், மேற்கத்திய தாக்கம் அதிகமாகி கொண்டே வருகின்றன..

 ஆணுறைகள்

ஆணுறைகள்

மேலும், பள்ளி மாணவ மாணவியருக்கு பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான அநேக சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன... பாஜக ஆளும் கர்நாடகாவில் பாலியல் கல்வி புறந்தள்ளப்பட்டு, நன்னெறிக் கல்வி மற்றும் பிரார்த்தனை வகுப்புகள் வாயிலாகவே பள்ளி மாணவர்களை வழிப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது... இப்படிப்பட்ட சூழலில்தான், ஆன்லைன் வசதியுடனான செல்போன் தேவைதான், மாணவர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன... அதற்கு பிறகே, பள்ளி மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.. இதையொட்டி, அம்மாணவர்களை அடிக்கடி சோதனை செய்யவும் முடிவானது.

சிகரெட்டுகள்

சிகரெட்டுகள்

அந்தவகையிலேயே, அம்மாநிலத்தின் "ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாக வாரியங்களின் சங்கம்" சார்பாக கடந்த நவம்பர் மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது... அப்போதுதான், ஆணுறைகளும், வாய்வழி கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள், ஒயிட்னர்கள், என மாணவர்களின் பைகளில் சிக்கின.. இந்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாணவர்களிடம் பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என்ற குரல்கள் மறுபடியும் வலுக்க துவங்கின.. ஆனால், இதை அரசு காதில் வாங்கவில்லை என தெரிகிறது.. அதற்கு பதிலாக வேறு யுக்தியை கையில் எடுத்தது.. அதாவது, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஆணுறை விற்பனை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது.

ஆணுறை

ஆணுறை

இந்த உத்தரவானது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதற்குமேல், கொதிப்பை ஏற்படுத்தியது... பாலியல் கல்வியை போதிக்க முன்வராதவர்கள், ஆணுறை கிடைக்க செய்யாததன் மூலம் மாணவ சமூகத்தை பால்வினை நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய கேடுகளுக்கு தள்ளுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.. அதுமட்டுமல்ல, ஆணுறை விற்பனை தடைக்கு எதிராக மருத்துவர்கள், உளவியலாளர்கள், கல்வியாளர்கள் என பலரும் திரண்டு, அரசுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.. எதிர்ப்புகள் நாலாபுறமும் அதிகமாகிவிட்ட நிலையில், மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், புதிய விளக்கத்தை தந்து வருகிறார்கள்.

 மெடிக்கல் ஷாப்

மெடிக்கல் ஷாப்

அதன்படி, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஆணுறை விற்பனை அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆனால் "ஆணுறை கோரும் மைனர் வயதினருக்கு உரிய கவுன்சிலிங்கை மருந்தகங்கள் வழங்க வேண்டும்" என்று விளக்கம் தந்துள்ளனர்.. இப்படி ஒரு விளக்கம் தந்தபோதிலும், இதற்கும் விமர்சனங்கள் வெடித்துள்ளன.. மாணவர்கள் ஆணுறை வாங்கச் செல்வதை தடுக்கும் இன்னொரு முயற்சி என்று குற்றச்சாட்டுகள் எழுவதுடன், மெடிக்கல் ஷாப்களில், கவுன்சிலிங் என்பதற்கு பதில் முழுமையான மற்றும் முறையான பாலியல் கல்வி போதிப்பே உரிய தீர்வு என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 தடம் புரண்டது

தடம் புரண்டது

மாணவப் பருவத்தினருக்கான கருத்தடை உபகரணங்கள் விற்பனை குறித்து விளக்கமான வழிகாட்டுதல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்துள்ளனர் என்றாலும், மாணவ சமுதாயம் தற்போது தடம் புரண்டுள்ளது, பரவலான கவலையை ஏற்படுத்தி வருகிறது.. அவர்களை வழிநடத்துவதில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும், விவாதங்கள் அம்மாநிலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.. இறுதியில், பாலியல் கல்வியே போதிக்கப்படுமா? அல்லது மாணவர்களை வழிநடத்த, அரசு வேறு வகையான யுக்தியை ஏதாவது கையாளுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

English summary
surprise school bag checks yield condoms cigarettes in bengaluru and ban on sale of condoms for minors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X