கம்ப்ளைண்ட் கொடுத்தது குத்தமா? ஸ்டேசனில் அத்துமீறிய டிஎஸ்பி! வெளியான டாய்லெட் வீடியோ..பறந்த வார்னிங்
பெங்களூர்: கர்நாடகாவில் நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைதாகி இருக்கிறார். டிஎஸ்பி அலுவலக கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும், மீறும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில டிஜிபி எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பணியிடங்கள், பொது இடங்களில் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லி வரை போராட்டம் நடைபெற்று வருகிறது.
பாலியல் தொல்லை:
மேலும் காவல்துறையினரே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தூமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயதான இளம் பெண். அங்கு உள்ள மதுரகிரி காவல்துறையில் ராமச்சந்திரப்பா என்ற 58 வயதானவர் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
டிஎஸ்பி அலுவலகத்தில் அதிர்ச்சி:
இந்த நிலையில் 36 வயதான அந்த பெண் ராமச்சந்திராப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து நிலத்தகராறு தொடர்பாக தன்னை சிலர் மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்த பெண் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என ராமச்சந்திரப்பா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை வீடியோ:
மேலும் அந்தப் பெண்ணை தனது ஓய்வறையின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த நிலையில் அதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ராமச்சந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
டிஎஸ்பி கைது:
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி அலோக் மோகன் மதுரகிரி டிஎஸ்பி ஆன ராமச்சந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க தூமகூரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தூமகூரு போலீசார் ராமச்சந்திரப்பா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டு இருப்பது கர்நாடகாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிபி எச்சரிக்கை:
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதோடு இது தொடர்பாக அறிக்கை அனுப்பவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொது மக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார்களில் சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் எச்சரித்துள்ளார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications