ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல்.. பாஜக 315 இடங்கள், காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என கணிப்பு
Recommended Video
பெங்களூரு: நேற்றுடன் மக்களவை தேர்தல் திருவிழா ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முன்னணி ஊடககங்கள் தேர்தலுக்கு பிந்தைய தங்களது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் பிரபல ஊடகமான ஸ்வர்னா செய்தி நிறுவனமும் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மத்தியில் கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவே, மீண்டும் அரியணை ஏறும் என பெரும்பான்மையான ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்தையே ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளும் கூறியுள்ளன. ஸ்வர்னா நியூஸ் சேனல் நடத்திய தேர்தலுக்கு பிந்தயை கருத்து கணிப்பின்படி, தேசியளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்கள் முதல் அதிகபட்சமாக 315 இடங்களில் வெற்றி வாகை சூட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தேசிய அளவில் குறைந்தபட்சம் 122 தொகுதிகளையும், அதிகபட்சமாக 125 தொகுதிகள் வரையும் கைப்பற்றும் என ஸ்வர்னா நியூஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் அல்லாத இதர கட்சிகள், சுமார் 102 தொகுதிகளை கைப்பற்றும் என ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிரண்டு எக்ஸிட் போல் முடிவுகள் தவிர, பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதாவே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications