காவிரி நதி நீர் பரபரக்கு நடுவே.. மேகதாது அணை பிரச்சினையை கிளப்பும் கர்நாடகாவின் டிகே சிவக்குமார்
பெங்களூர்: மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டினால் இரு மாநிலங்களும் சமமாக பயனடையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர்மட்டம் குறித்தும், மற்ற அணைகளில் நீர் இருப்பு குறித்தும் கூறப்பட்டது. இதையடுத்து இங்குள்ள நீர் கர்நாடக மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் பாசனத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்திற்கு நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் என்று கூறினார். இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். இன்று தமிழகத்தில் கண்டனம் தெரிவித்து சாலை மறியில் ஈடுபட்டனர். மேலும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். தொடர்ந்து இது தொடர்பாக தமிழகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் என்றும், கர்நாடகாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்நாடக அரசை சட்டமன்ற அனைத்து கட்சிகள் கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறுகையில், "மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதால், இரு மாநிலங்களும் சமமாக பயனடையும். தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடப்பது எங்களுக்கு ஆட்சேபம் இல்லை" என்று கூறினார்.
-
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications