நீயா நானா “காப்பி”தான் தமிழா தமிழா.. கரு.பழனியப்பனே சொல்லிட்டாரு! “கோபிநாத் ரஜினி.. நான் விஜயகாந்த்”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சாயல்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார் அதன் நெறியாளரும் இயக்குநருமான கரு.பழனியப்பன். நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் பிரமாதமாக நடத்தி பழகிவிட்டார் என பாராட்டி உள்ள கரு.பழனியப்பன் அதேபோன்ற வெற்றிகரமான நிகழ்ச்சியாக தமிழா தமிழாவை மாற்ற முயல்வதாக கூறியுள்ளார்.
தனியார் இதழுக்காக பேராசிரியை பர்வீன் சுல்தானா எடுத்த நேர்காணலில் இயக்குநரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நெறியாளருமான கரு.பழனியப்பன் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் பர்வீன் சுல்தானா, "நீங்கள் நடத்தும் தமிழா தமிழா நிகழ்ச்சி நீயா நானாவின் சாயலில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

கரு பழனியப்பன் பேச்சு
இதற்கு பதிலளித்த கரு.பழனியப்பன், "நாங்கள் எடுப்பதே நீயா நானா நிகழ்ச்சிதான். அதற்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் தமிழா தமிழா. நீயா நானா என்பது வேறொரு நிகழ்ச்சி. இங்கு எதுவுமே புதியது அல்ல என்று எல்லோரிடமும் சொல்வேன். நான் முதன்முதலில் மீசை வைத்து முறுக்கியது ஏற்கனவே வேறொருவர் வைத்து இருந்த மீசையைதான்.

நீயா நானாவின் சாயல்தான் தமிழா தமிழா
எனக்கா முதன்முதல் முதலில் மீசை முளைத்தது. நானா முதலில் மீசையை முறுக்கினேன். நான் முதலில் கட்டிய வேட்டி ஏற்கனவே ஒருவர் கட்டியது." என்று தெரிவித்தார். "இது அடாவடித் தனமான பதிலாக தெரியவில்லையா?" என்று பர்வீன் சுல்தானா கேட்க, "அதுதான் உண்மை. நீயா நானா வேறு, தமிழா தமிழா வேறு என்று நான் சொல்லலாம். ஆனால் நீங்கள் கீழேபோய் என்ன சொல்வீர்கள்? எது உண்மை?

நீயா நானா ரஜினிகாந்த்
நீயா நானா ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக நடந்துகொண்டு இருக்கிறது. அதுபோன்ற நிகழ்ச்சியை எடுக்க எல்லா தொலைக்காட்சிகளும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. அது 15 வருசமாக நடக்கக்கூடிய விளையாட்டு. நேர்த்தியாக அதற்கு பழகிவிட்டார்கள். அது ரஜினிகாந்த்தான். பல பேர் வந்து நல்லிகாந்த் ஆகிவிட்டார்கள்.

கோபிநாத்துக்கு பாராட்டு
நான் விஜயகாந்த் ஆக முயற்சி செய்கிறேன். இது 3 வருசம்தான் ஆகிறது. கோபி அதை பிரமாதமாக நடத்தி பழகிவிட்டார். அவர்கள் அசைந்தால் ஏன் அசைகிறார் என்று தெரியும். நிகழ்ச்சி தொங்குகிறது என்றால் ஏன் தொங்கிறது என தெரியும். இது புதிய அணி. இதை இவ்வளவு நாள் வெற்றிகரமாக நடத்தி விட்டார்கள்.

பலர் விழுந்துவிட்டார்கள்
நாம் எதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சிபோல் ஆவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆனால் பல பேர் விழுந்துவிட்டார்கள். நல்ல வேளையாக நாம் விழவில்லை. ஒருமாதிரியாக நடத்திவிட்டோம். அடுத்த இடத்துக்கு போவோம். இதை பிரமாதமாக்க முயற்சி செய்வோம்.

வெளிநாட்டு நிகழ்ச்சி
அவர்கள் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தியது இல்லை. நாங்கள் வெளிநாட்டில் நிகழ்ச்சியை நடத்தினோம். ஜீ டிவிக்கு சிங்கப்பூரில் அலுவலகம் உள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடத்தினோம். கொரோனாவால் மீண்டும் நடத்த முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் சிங்கபூருக்கு போகிறோம். அதற்கு வரவேற்பு கிடைத்தால் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்வோம்." என்றார்

நேர்மையான பதில்
இதை கேட்ட பர்வீன் சுல்தானா, "நீங்கள் நேர்மையான பதிலாக வெளிப்படையாக சொன்னீர்கள். மகளிர் பஞ்சாயத்து என்று ஒரு பொதிகை டிவியில் ஒரு நிகழ்ச்சி. அதற்கு பிறகு சன் டிவியில் அரட்டை அரங்கம். அடுத்து விஜய் டிவியில் நீயா நானா. இப்போது ஜீ தமிழில் தமிழா தமிழா. இப்படி மக்களை பொதுவெளியில் வைத்து பேசுவது பழைய மரபிலிருந்து வந்திருக்கா? அதை நீங்கள் தூக்கி எடுத்து சொல்வதை நகைப்போடு சொல்லி இருக்கிறீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications