ஆசையாக BE படிச்சவங்களுக்கு பெரிய ஆப்பு.. பாதிக்கு பாதியாக குறையும் சம்பளம்.. ஷாக்கிங் தகவல்
பெங்களூர்: இந்தியாவில் பொறியியல் மற்றும் தரவுத் துறை நிபுணர்களுக்கான சராசரி சம்பளம் 2024 ஆம் ஆண்டில் $36,000 ஆக இருந்தது. ஆனால், 2025 ஆம் ஆண்டில் இது 40% குறைந்து $22,000 ஆக இருக்கும் என Deel மற்றும் Carta நிறுவனங்களின் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சராசரி சம்பளம் 3.5 லட்சம் ரூபாயில் இருந்து 1.8 லட்சம் ரூபாயாக குறைந்து உள்ளது.
அதேசமயம், அமெரிக்காவில் இதே பணிகளுக்கான சராசரி சம்பளம் $122,000 இலிருந்து $150,000 ஆக உயர்ந்துள்ளது.

சராசரி சம்பளம் சரிவு
அதாவது நீங்கள் ஒரு பணியாளர் என்று எடுத்துக்கொள்வோம். உங்கள் துறையில் இப்போது நீங்கள் சராசரியாக ஒன்றரை லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள். ஆனால் இதே துறையில் இப்போது ஒருவர் உங்கள் பொறுப்பில் இணைகிறார் என்றால் அவருக்கு சம்பளம் 1 லட்சம் ஆக குறையலாம். அல்லது அதற்கும் கீழ் குறையலாம். இதன் காரணமாக அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் நீக்கப்பட்டு குறைந்த சம்பளம் வாங்குபவர் எடுக்கப்படலாம்.
இந்தியாவில் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புப் பணிகளுக்கான சராசரி சம்பளம் $23,000 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்காவில் இதே பணிகளுக்கான சராசரி சம்பளம் $138,000 ஆக உள்ளது. விற்பனைப் பணிகளில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புத் துறைகளில் பாலின ஊதிய இடைவெளி இன்னும் அதிகமாகவே உள்ளது.
கனடா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஊதிய இடைவெளி கணிசமாக உள்ளது. ஆனால், உலக அளவில் மிகக் குறைவான பாலின ஊதிய இடைவெளி கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு ஆண், பெண் இருபாலரின் சராசரி சம்பளமும் $13,000 முதல் $23,000 வரை உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் முதல் 1.8 லட்சம் ரூபாய் வரை.
விற்பனைப் பிரிவில் இந்தியா பாலின சமத்துவத்தை அடைந்துள்ளது. இதில் ஆண், பெண் இருபாலரும் $12,000 சம்பாதிக்கின்றனர். ஆனால், தயாரிப்பு மற்றும் வடிவமைப்புப் பணிகளில் ஆண்களின் சராசரி சம்பளம் $23,000 ஆகவும், பெண்களின் சராசரி சம்பளம் $18,000 ஆகவும் உள்ளது.
ஆண்களின் சராசரி சம்பளம்
இதேபோல், தரவுத் துறைப் பணிகளில் ஆண்களின் சராசரி சம்பளம் $18,000 ஆகவும், பெண்களின் சராசரி சம்பளம் $13,000 ஆகவும் பதிவாகியுள்ளது. Deel நிறுவனம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஒப்பந்தங்களையும், 35,000 வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.
Carta நிறுவனத்தின் தரவுகள், $300 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட நிறுவனங்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிபுணர்களுக்கான மொத்த ஊதியம் உயர்ந்து வருகிறது. இதற்கு பங்குகள் அடிப்படையிலான ஊதிய முறை ஒரு முக்கிய காரணமாகும்.
Carta நிறுவனத்தின் தரவுகளின்படி, பொறியாளர்களுக்கான பங்கு மானியங்கள் (நிறுவனத்தின் உரிமையின் ஒரு பகுதி) 2021 முதல் 2025 வரை சீராக உயர்ந்துள்ளன. குறிப்பாக பிரேசில் மற்றும் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் இந்த உயர்வு வேகமாக உள்ளது. இது பங்குகள் அடிப்படையிலான ஊதிய மாதிரிகளை நோக்கி உலகம் நகர்கிறது என்பதைக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications