பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் சகோதரரின் கார்.. குடும்பத்தினருடன் மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவின் மைசூரு அருகே நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் பயணித்திருந்த நிலையில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பந்திப்பூரில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்வதற்காக பிரஹலாத் மோடி நேற்று(டிச.26) தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் காப்பகத்திற்கு மெரிசிடஸ் பென்ஸ் காரில் இன்று குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளனர். திட்டமிட்டபடி பந்திப்பூரில் புலிகளை பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.

நெருங்கிய நண்பர்கள்! எம்ஜிஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது ஏன்? உருக்கமாக சொன்ன ராதாரவி நெருங்கிய நண்பர்கள்! எம்ஜிஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது ஏன்? உருக்கமாக சொன்ன ராதாரவி

கார் மைசூரு-நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் மோதியுள்ளது. கார் வேகமாக மோதியதில் காரின் முன் சக்கரங்கள் தெரித்து சிதறியுள்ளன. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இவர்களை மீட்டு உடனடியாக எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த சம்பவத்தையடுத்து மைசூர் எஸ்பி சீமா லட்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல விபத்து நடந்த இடத்தையும் ஆய்வு செய்துள்ளார். விபத்தில் பிரஹலாத் மோடிக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல அவரது பேரனுக்கும், கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கர்நாடக அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் இவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு வர இருக்கிறார். இதனால் மருத்துவமனை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ஹரியான அமைச்சரின் பென்ஸ்

ஹரியான அமைச்சரின் பென்ஸ்

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலங்களாக சொகுசு கார்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது விவாதத்தை கிளப்பி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜி தான் பயணித்த பென்ஸ் காரில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பி இருந்தார். அதாவது இவர் ஹரியானாவின் அம்பாலா காண்ட் பகுதியிலிருந்து குருக்ராமை நோக்கி மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ் செடான் எனும் ஆடம்பர காரில் அவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

சைரஸ் மிஸ்திரியின் பென்ஸ்

சைரஸ் மிஸ்திரியின் பென்ஸ்

ஆனால் வழியில் திடீரென காரின் ஷாக் அப்சர் இரண்டாக உடைந்தது. இதில் நல்வாய்பப்பாக யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரியும் இதேபோல பென்ஸ் காரில் பயணித்தபோதுதான் உயிரிழந்தார். அதாவது இவர் பென்ஸ் GLC 220D ரக காரில் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு வந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் தடுப்பு சுவரில் கார் வேகமாக மோதியுள்ளது. இதில் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர் விபத்து

தொடர் விபத்து

காவல்துறையினரின் விசாரணையில் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த காரில் மொத்தம் 7 ஏர் பேக் இருக்கும். பயணிகளின் தலையை மட்டுமல்லாது கால் முட்டிகளை பாதுகாக்கவும் இந்த ஏர் பேக் பயன்படும். உலகின் மிக பாதுகாப்பான கார்களில் இந்த காரும் ஒன்று. சர்வதேச சந்தையில் இதற்கு 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், சீட் பெல்ட் அணியாவிட்டால் இந்த ஏர் பேக் வேலை செய்யாது. இந்நிலையில் தற்போது விபத்தில் சிக்கியுள்ள பிரதமரின் சகோதரர் பிரஹாத் மோடியின் காரும் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். அப்படி இருக்கையில் இந்த காரும் கட்டுப்பாட்டை இழந்ததால்தான் விபத்தில் சிக்கியிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi's brother Prahalad Modi was traveling with his family when the car they were traveling in met with an accident on the highway near Mysuru, Karnataka. After this all of them have been admitted to the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X