கேரளாவில் கட்டாய மலையாள மொழி மசோதா.. கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு.. கவர்னரிடம் முறையீடு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கேரள அரசின் மலையாள மொழி மசோதாவிற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள எல்லையில் உள்ள மாவட்டமான காசர்கோட்டில் வசிக்கும் கன்னடர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்றும் கர்நாடகா அரசு கூறியுள்ளது. இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்று கேரள கவர்னரை நேரில் சந்தித்து கர்நாடக அதிகாரிகள் கோரிக்கையும் வைத்துள்ளார்கள்.

கேரளாவை பொறுத்தவரை மலையாளமே ஆட்சி மொழியாக உள்ளது. அதேநேரம் பள்ளிகளில் மலையாளம் கட்டாயமாக்கப்படவில்லை.. தமிழ்நாட்டை போலவே தமிழ் மாநில பள்ளிகளில் மட்டும் கட்டாயப்பாடமாக உள்ளது. எனினும் கேரளாவை பொறுத்தவரை மலையாளிகளை தாண்டி, தமிழர்கள், கன்னடர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அதேபோல் காசர்கோடு மாவட்டத்தில் கன்னடர்கள் கணிசமாக வசிக்கிறார்கள்..

Kerala Malayalam Karnataka

இந்த சூழலில் கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மலையாள மொழி மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதன்படி கேரளாவில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை முதல் மொழியாக மலையாளத்தை கட்டாயம் கற்க வேண்டும். இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில எல்லையில் கேரளாவுக்குள் அமைந்துள்ள காசர்கோட்டில் அதிகளவில் கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக எல்லை மேம்பாட்டு ஆணைய பிரதிநிதிகள் அதாவது அந்த ஆணைய செயலாளர் பிரகாஷ் மட்டிஹள்ளி, உறுப்பினர்கள் சுப்பையா கட்டே, தெக்கிகெரே சங்கரநாராயணா பட், ஜெயப்பிரகாஷ் நாராயணா தொட்டிதோடு உள்ளிட்டோர் கேரளாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கர்நாடகா அரசு கூறுகையில், "கேரள அரசு கொண்டு வந்துள்ள மலையாள மொழி மசோதா சட்டவிரோதமானது. காசர்கோட்டில் அதிகளவில் கன்னட மொழி பேசும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அங்கு மொழி சிறுபான்மையினராக உள்ளனர். மாநில அரசின் சட்டத்தால் கன்னட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

காசர்கோட்டில் தகவல் பலகைகள், நெடுஞ்சாலைகளில் பெயர் பலகைகள், அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பணி நியமன அறிவிப்புகளில் கன்னட மொழியும் இடம் பெற வேண்டும். இதற்கு அரசியல் சாசனம் அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் காசர்கோடு கலெக்டர் மாதத்திற்கு 2 கூட்டங்களை நடத்தி மொழி சிறுபான்மையினரின் கோரிக்கைகளை கேட்டு அறிய வேண்டும்.

மாநில அரசின் சட்டம், கன்னட மக்களையும் மலையாளம் கட்டாயம் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. கன்னடத்தை தாய்மொழியாக கற்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட கவர்னர், இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைப்பதாகவும், அதை ஆழமாக ஆய்வு செய்து காசர்கோட்டில் வசிக்கும் கன்னடர்களின் நலன் காக்கப்படும் என்றும் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+