நாகப்பாம்பை பிடித்து வில்லங்க விளையாட்டு.. 3 நிமிடத்தில் முடிந்த வாழ்க்கை.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஒரு சிறிய கவனக்குறைவும், தேவையற்ற வீரமும் ஒரு மனிதனின் வாழ்வை நிமிடங்களில் முடித்துவிடும் என்பது சம்பவமாக ஒரு வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில பாம்பைப் பிடித்த நபர், பாம்பை எடுத்துக் கொண்டு நடந்த வந்தார். இறுதியாக கேமரா முன்னிலையில அதனுடன் விளையாடியதற்காகப் பெரும் விலையை கொடுத்துள்ளார்- வெறும் 3 நிமிடங்களுக்குள், நேரலை வீடியோவிலேயே யாருமே நம்ப முடியாத சம்பவம் நடந்துள்ளது. எனினும் இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறப்படுகிறது. நேற்று மீண்டும் பரவி வருகிறது. கோடைக்காலத்தில் பாம்புகள் அதிகமாக வருவதால் இந்த சம்பவம் பலருக்கு பாடமாக இருக்கிறது.

சமூக வலைதளங்களை பொறுத்தவரை ஒரு சம்பவம் நடந்த பின்னர், மீண்டும் மீண்டும் புதிதுபோல் பதிவிட்டது வைரலாக்குவார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் இப்போது ஒர நாளில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். கர்நாடக மாநிலம், சிவமொக்கா அருகே உள்ள சாகர் (Sagar) என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அந்த இடம் தானா என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.

The man who came to catch the cobra paid a heavy price for playing with it what happened

எனினும் வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டது தான் என்பது தெரியவந்தது. அந்த வீடியோவில பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவராகக் கருதப்பட்ட ஒருவர், நாகத்தைப் பிடித்துக் கேமரா முன்னால் விளையாடியபோது, அது கடித்ததில் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். அவர் கடித்த இடத்திலிருந்து விஷத்தை வாயால் உறிஞ்சி எடுக்க முயன்றார், ஆனால் அதுவே விஷம் இரத்தத்தில் மிக வேகமாகச் செல்ல காரணமாகிவிட்டது.


உயிரைப் பறிக்கும் முட்டாள்தனம்

பாம்புகள் என்பவை அச்சப்பட வேண்டிய உயிரினங்கள் மட்டுமல்ல, அவை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டியவை ஆகும். ஆனால், இன்று சமூக வலைதளங்களில் 'லைக்' வாங்குவதற்காகவும், தன்னை வீரனாகக் காட்டிக் கொள்ளவும் பலர் பாம்புகளைப் பிடித்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஒரு விபரீத விளையாட்டு தான் ஒருவருக்கு எமனாகி உள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் ஒரு பெரிய நாகத்தைப் பிடித்து, அதன் முன்னால் கைகளை ஆட்டியும், அதனுடன் விளையாடியும் கேமரா முன்னால் சாகசம் செய்கிறார். முதலில் அமைதியாக இருந்த பாம்பு, ஒரு கட்டத்தில் மின்னல் வேகத்தில் அவரது கையில் கடித்து விட்டது. அப்படி கடித்தவுடன் பதற்றமடையாமல், கடித்த இடத்தில் உள்ள விஷத்தை அவர் தனது வாயால் உறிஞ்சித் துப்ப முயன்றார். ஆனால், இதுவே அவரது மரணத்தை உறுதி செய்தது. விஷம் அவர் வாயின் வழியாக இரத்த ஓட்டத்தில் மிக வேகமாகத் பரவியதால், அடுத்த 3 நிமிடங்களுக்குள்ளேயே அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்யக்கூடாத முட்டாள்தனமான தவறு

திரைப்படங்களில் வருவது போல கடித்த இடத்திலிருந்து விஷத்தை வாயால் உறிஞ்சி எடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். வாயில் உள்ள சிறு புண்கள் வழியாக விஷம் நேரடியாக இதயத்திற்கும் மூளைக்கும் சென்று நொடிகளில் மரணத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியவில்லை.. பாம்புகள் எவ்வளவுதான் அமைதியாகத் தெரிந்தாலும், அவை எப்போது தாக்கும் என்று சொல்ல முடியாது. வனத்துறை அனுமதியின்றி பாம்புகளைப் பிடிப்பதும், அதை வைத்து வித்தை காட்டுவதும் சட்டப்படி குற்றமாகும்.

பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய ஒரே காரியம், பதற்றமடையாமல் கடித்த இடத்தை இதய மட்டத்திற்கு கீழே வைத்துவிட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று 'பாம்பு விஷ முறிவு மருந்து' செலுத்திக் கொள்வதுதான் ஒரே வழி.. ஒரு சிறிய கவனக்குறைவும், தேவையற்ற வீரமும் ஒரு மனிதனின் வாழ்வை நிமிடங்களில் முடித்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடம். பாம்புகளைக் கண்டால் விலகிச் செல்லுங்கள் அல்லது உரிய மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுங்கள். உங்கள் உயிர் ஒரு 'லைவ்' வீடியோவை விடப் பெரியது.. இது பழைய வீடியா என்றாலும் கோடைக்காலத்தில் பாம்புகள் அதிகம் வருவதால், நிச்சயம் பலருக்கும் பாடமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+