ஹிஜாப் எங்கள் தலையை தான் மறைக்கிறது, மூளையை அல்ல.. நேருக்கு நேர் சீறிய மாணவி.. நழுவிய பாஜக அமைச்சர்
பெங்களூரு : கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஹிஜாப் எங்கள் தலையை தான் மறைக்கிறது.. மூளையை அல்ல என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷிடம் தனியார் செய்தி சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய மாணவி ஆவேசமாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் பதற்றத்தைத் தணிக்க பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடுப்பி அரசு பல்கலைக்கழக பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி மாணவிகள் ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த மாணவிகள் சார்பாக வழக்கறிஞர் தேவதாத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இடைக்கால தடை இல்லை
இந்த நிலையில் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் தீர்ப்பளித்துள்ளார். பள்ளிகளை மத அடையாளங்களை கொண்டு செல்வது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது தெரியவில்லை எனவும், அரசியல் சாசன சட்டப்படி கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி தீக்ஷித், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டார்.

மாணவி ஆவேசம்
இந்நிலையில், கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷுடன், ஹிஜாப் அணிவது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வ்ழக்குத் தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான மாணவி ஒருவருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்தது. பிரத்யேக நேர்காணலில் பேசிய மாணவி ஹஸ்ரா ஷிஃபா, ஹிஜாப் நம் தலையை மறைக்கிறது, நமது மூளையை அல்ல. மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர்
நாங்கள் வெறுமனே எங்களின் அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை கோருகிறோம், அது குற்றமல்ல. ஹிஜாப் அணிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்று யார் சொன்னது?" என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷிடம் ஆவேசமாக கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் நாகேஷ் நேரடியான பதிலைத் தவிர்த்துவிட்டு, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் எப்படி மனு தாக்கல் செய்யலாம் எனவும், சில இஸ்லாமிய அமைப்புகள் மாணவர்களைத் தூண்டிவிடுகின்றன என்றும் நாகேஷ் சுட்டிக் காட்டினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications