2 தீர்மானங்கள் + 5 கோரிக்கைகள்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்.. திருமாவளவன் வலியுறுத்த இருப்பது இதுதான்!
பெங்களூர்: எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்ற நிலையில், இன்று பெங்களூரில் முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளன. இதில் பங்கேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, விசிக சார்பில் சில விஷயங்களை வலியுறுத்த இருக்கிறார்.
2014ம் ஆண்டு தொடங்கி 2019 என இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்திலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக, மூன்றாவது முறையாக 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 26க்கும் அதிகமான எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இக்கூட்டத்தில் முதல் முறை பங்கேற்கும் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சில கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார். அதாவது, "மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தற்போதைய சூழலில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் மற்றும் புஞ்சி கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, தொகுதிகளை மறு பரிசீலனை செய்வது குறித்த விதிகளை இணைக்க வேண்டும். மேலும், SC, ST மற்றும் OBC சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிப்படுத்த சட்டப் பாதுகாப்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

மத சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்றத் துறைகளில் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பில் உள்ள பாதுகாப்பிற்கு CMP (Common Minimum Program) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இது தவிர இரண்டு தீர்மானங்களையும் இந்த கூட்டத்தில் விசிக முன்மொழிகிறது. அதன்படி, மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் குழுவை அனுப்ப வேண்டும். அதேபோல பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்கிற தீர்மானத்தையும் இயற்ற வேண்டும்" என்று விசிக சார்பில் திருமாவளவன் வலியுறுத்த இருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications