மேஜிக் நம்பரை தொடும் காங்.. கர்நாடகாவில் கவிழும் தாமரை! பாஜகவுக்கு கஷ்டம்! புது எக்ஸிட் போல் முடிவு
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தாலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என்று டுடே சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது. இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலமாக பாஜக இருக்கிறது.
இதன் காரணமாகக் கர்நாடகாவில் எப்படியாவது பாஜக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. இதற்காக அவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

கர்நாடக தேர்தல்: அங்கே பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இருக்கிறது. இருப்பினும், பொம்மை அரசு மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் எளிதாக வெல்வோம் என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறது. மேலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் காங்கிரஸ் கூறுகிறது.
இந்தச் சூழலில் தான் இன்று சட்டசபைத் தேர்தல் கர்நாடகாவில் நடந்தது.. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு ஒரு கட்சிக்கு 113 இடங்கள் தேவைப்படுகிறது. இதனிடையே இன்றைய தினம் அங்கே இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் ஒரு சில இடங்களில் சிறு வன்முறை ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற சூழலில் எந்தக் கட்சிக்கு அந்த மேஜிக் நம்பர் கிடைக்கும் என்பதே இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

டுடே சாணக்கியா: கர்நாடகாவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இடையில் பல இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் கடும் போட்டி அளித்தே வருகிறது. வாக்குப்பதிவு இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது.
அதன்படி இப்போது டுடே சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 120 கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கடும் போட்டி தரும் என்ற போதிலும் பாஜக இதில் 92 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜேடிஎஸ் 12 இடங்களில் வெல்லும் என்றும் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications