"மேகதாது அணை!" பாத யாத்திரை சென்ற டிகே.சிவகுமார் துணை முதல்வர்! தமிழக அரசுக்கு காத்திருக்கும் சவால்
பெங்களூர்: கர்நாடகாவில் டிகே சிவக்குமார் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், மேகதாது விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்பது தமிழ்நாடு அரசுக்குச் சவாலாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

கர்நாடக தேர்தல்: கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில், 135 இடங்களில் காங்கிரஸ் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், யார் முதல்வர் என்பதில் குழப்பம் நிலவியது.
டெல்லி காங். தலைமை முதல்வரைத் தேர்வு செய்யும் எனக் கூறப்பட்ட நிலையில், 4 நாட்களாக இதில் குழப்பமே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பதவிக்கு டிக் அடித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தியே நேரடியாகத் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு ஓகே சொல்லியுள்ளார்.
டிகே சிவக்குமார்: அது மட்டுமில்லை, கர்நாடக அமைச்சரவையில் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் 6 பேருக்கு இடம் தரப்பட உள்ளது. காங்கிரஸ் இப்போது ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை வைத்துள்ளது. இருப்பினும், அதையும் தளர்த்தி டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் தொடர அனுமதி அளித்துள்ளது. இது டிகே சிவக்குமாருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் நாம் மற்றொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தொடர்பாகப் பல ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டிற்கு நியமாகக் கிடைக்க வேண்டிய நீரைக் கூட தர கர்நாடக யோசித்தே வருகிறது. காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதில் பெரிய மாற்றம் இருந்ததே இல்லை.
மேகதாது அணை: அதிலும் குறிப்பாக டிகே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியவர். மேகதாதுவில் அணைக் கட்டினால் அது தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பாதிக்கும் என்று தமிழக அரசு போராடி வருவது அனைவருக்கும் தெரியும். அதே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி யாத்திரை நடத்தியவர் தான் டிகே சிவக்குமார்.
இதை வலியுறுத்தி அவர் ராமநகர் மாவட்டம் கனகபுராவில் காவிரி மற்றும் அர்காவதி நதிகள் இணையும் சங்கமம் என்ற இடத்தில், 'நமது தண்ணீர், நமது உரிமை' என்ற 10 நாள் பாதயாத்திரை கடந்த 2022 ஜனவரி 9 மாதம் நடத்தினார். மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை கனகபுரா, ராமநகரா மற்றும் பிடாதி வழியாக இந்த பேரணி நடக்க இருந்தது.
இருப்பினும், பெங்களூரில் நுழையும் முன்பு கொரோனா காரணமாக அந்த பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அந்த பாத யாத்திரை மாநிலம் முழுக்க பெரும் பேசுபொருளானது. காங்கிரஸ் மற்றும் டிகே சிவக்குமாருக்கு நல்ல பூஸ்டை கொடுத்தது. இப்படி மேகதாது அணை கட்ட பாத யாத்திரை நடத்திய டிகே சிவகுமார் துணை முதல்வர் பதவியைக் கொடுத்துள்ளனர்.
தேர்தல் அறிக்கை: அத்துடன் நிற்காமல் தேர்தல் அறிக்கையும் இது குறித்து அறிவித்திருந்தது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பிடித்த நிலையில், அதில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இது அப்போது தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

லிங்காயத்து பெல்ட்டான தெற்கு கர்நாடக பகுதிகளில் சிவகுமாரின் ஆதிக்கத்தால் தான் மஜதவை விடவும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த பகுதிகள்தான் மேகதாது அணையாலும் பலன் பெறும் பகுதிகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சிவகுமார் தனது செல்வாக்கை நிலை நிறுத்த மேகதாதுவைப் பெரிதாக்கக் கூடும்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பே கூட மேகதாது விவகாரத்தை சிவக்குமார் பெரிதாக்கக் கூடும். ஆக மொத்தத்தில், கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்றாலும் கூட தமிழ்நாடு அரசுக்கு மேகதாது சவாலாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications