நம்ம மக்களிடம் இதுதான் பிரச்சினை.. லைட்டா ஊரடங்கு தளர்வு.. அதற்குள் டிராபிக் ஜாம்.. பெங்களூரில்
பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட முதல் நாளான இன்று, பெங்களூரில் டிராபிக் ஜாம் ஆகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. புதிதாக சேரும் நோயாளிகள் எண்ணிக்கை ஒற்றைப்படை இலக்கத்தில் உள்ளன. நேற்று பெங்களூர் ஹொங்கசந்திரா பகுதியில் 10 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அது ஒரு கிளஸ்டராக மாறியது. அதை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில்தான், 23ம் தேதியான இன்று முதல், ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது.
மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டிட பணிக்கும் அனுமதி வழங்கப்பட்டது, சாப்ட்வேர் துறையில், 30 சதவீதம் அளவுக்கான, அத்தியாவசிய தேவைக்கான ஊழியர்களை மட்டும் பணி அமர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சமூக இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும், கார்களில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும், பைக்கில் ஒருவருக்கே அனுமதி போன்ற பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால், பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தளர்வு அமல்படுத்திய முதல் நாளான இன்று, சாலைகளில் வாகனங்களில் வந்து குவிந்து விட்டனர் மக்கள்.
இதனால், டவுன்ஹால், மடிவாளா, ஹெப்பால் உள்ளிட்ட பல பகுதிகளில் டிராபிக் ஜாமே ஆகிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெங்களூர் சிவப்பு மண்டலத்தில் உள்ளது. 91 பேர் இந்த நகரத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. தேவையில்லாமல் சாலைகளில் வந்து குவிந்துவிட்டனர். இதனால் பெங்களூரில் வழக்கமான நாட்களை போல டிராபிக் ஜாம் ஆகிவிட்டது.
லாக்டவுனை தளர்த்தும்போது எந்த மாதிரி பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதற்கு, பெங்களூர் சம்பவம் ஒரு உதாரணமாக மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications