Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காவிரி ஆற்றை வணங்குவோம்".. பெங்களூரில் மார்ச் 21ல் மாஸாக நடக்கும் ‛காவிரி ஆரத்தி’.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உத்தர பிரதேசத்தில் கங்கை ஆற்றை போற்றி வணங்க தினமும் ‛கங்கை ஆரத்தி' நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் காவிரி ஆற்றை போற்றி வணங்க பெங்களூரில் முதல் முறையாக ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி வரும் 21ம் தேதி சாங்கி டாங்க் ஏரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சாங்கி டாங்க் ஏரியை தேர்வு செய்தது ஏன்? விழாவில் எத்தனை பேர் பங்கேற்பார்கள்? என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி வழியாக கங்கை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை வணங்கும் வகையில் மாலையில் 30 நிமிடம் வரை கங்கை ஆரத்தி என்பது நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

cauvery aarthi bangalore sankey tank lake

அதேபோல் பெங்களூரில் முதல் முதலாக ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி என்பது நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏற்பாடுகள் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சியின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது பெங்களூரில் வசிக்கும் மக்களில் 70 சதவீதம் பேர் காவிரி ஆற்று தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். பாகமண்டலாவில் இருந்து நேரடியாக பெங்களூருவுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தினமும் பெங்களூர் நகருக்கு காவிரி ஆற்றில் இருந்து 2,225 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) லிட்டர் தண்ணீர் வருகிறது. இதனால் பெங்களூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு காவிரி தண்ணீர் என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. காவிரி ஆற்றை காவிரி தாய் என்றே பெங்களூர் மற்றும் கர்நாடகா மக்கள் அழைத்து வருகின்றனர். இப்படியான சூழலில் குடிநீர் தந்து உதவும் காவிரி ஆற்றுக்கு நன்றி சொல்லி வணங்கும் வகையில் இந்த ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அதன்படி பெங்களூர் சாங்கி டாங்க் ஏரியில் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து அர்ச்சகர்கள் வருகின்றனர். நிகழ்ச்சிக்கு மேடை என்பது அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட பல பிரமுகர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

cauvery aarthi bangalore sankey tank lake

இந்த விழாவில் காவிரி உள்பட மேலும் 2 புனித நதிகளின் தண்ணீர் பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக லைட்டிங் டிஸ்பிளே, லேசர் ஷோ, இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், ‛‛இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும். பெங்களூரில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் என்பது கலந்து வருகிறது. சாங்கி டாங்க் ஏரி சுத்தமான ஏரியாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் பொதுமக்கள் கழிவுநீரை ஏரியில் விடமாட்டார்கள்'' என்றார்.

காவிரி ஆறு என்பது கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வருகிறது. பெங்களூர் வழியாக காவிரி ஆறு செல்லவில்லை. காவிரி ஆற்றின் தண்ணீரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது பெங்களூர் சாங்கி டேங்க் ஏரியை ஏன் ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சிக்கு தேர்வு செய்தனர் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். அதாவது உத்தர பிரதேசத்தில் கங்கை ஆரத்தி கங்கை நதியின் படித்துறையில் நடக்கும்போது காவிரி ஆரத்தி மட்டும் சம்பந்தமே இல்லாமல் பெங்களூர் சாங்கி டாங்க்கில் நடத்துவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.

இதற்கான விடை என்னவென்றால் காவிரியின் துணை நதியான விருஷபாவாதி என்பது சாங்கி டாங்க் பகுதியில் தான் பிறந்ததாக நம்பப்படுகிறது. அதாவது சாங்கி டாங்க் ஏரியின் அருகே ஸ்ரீஜல கங்கம்மா தாய் கோவில் உள்ளது. விருஷபாவதி நதியின் பிறப்பிடத்தை அறிய இந்த கோவில் முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் சாங்கி டாங்க் ஏரி இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெங்களூரில் சுத்தமான ஏரி என்றால் அது சாங்கி டாங்க் தான் என்பது இன்னொரு காரணமாகும்.

மேலும் பெங்களூரை சேர்ந்த இன்னொரு தரப்பினர் விரிஷபாவதி ஆறு என்பது பசவனகுடியில்உள்ள பிக் புல் டெம்பிள் என அழைக்கப்படும் கோவிலில் உள்ள நந்தியின் சிலையின் பாதத்தில் இருந்து உருவானதாக கூறுகின்றனர். இருப்பினும் தற்போது அங்கு அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் கூட முடியாது என்பதால் காவிரி ஆரத்தி நிகழ்ச்சி சாங்கி டேங்க் ஏரியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+