இரவில் கொடூரம்.. விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி! கர்நாடகாவில் கோரச் சம்பவம்!
ஹாசன்: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 12) லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாசனின் ஹோலேநரசிபுராவில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, செண்டர் மீடியனில் பாய்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மாவட்ட நிர்வாகம் அச்சம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். மேலும், இந்த விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரையும் காயங்களுடன் மீட்டனர். காவல்துறை வட்டார தகவல்களின்படி, லாரி கட்டுப்பாட்டை இழந்து விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளின் போது மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஹோலநரசிபுராவில் உள்ள ஹிரேபெலகுலியைச் சேர்ந்த புவனேஷ் என்ற லாரியின் ஓட்டுநர், பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் இந்த சம்பவம் குறித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் உறுதியளித்தார். "ஹாசனில் விநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்காகச் சென்ற ஊர்வலத்தின் மீது லாரி மோதியதில் பலர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.
அரசின் சார்பாக, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சம்பவத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும். இது மிகவும் வேதனையான தருணம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்" என்று சித்தராமையா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹாசன் மாவட்டத்தில் உள்ள மொசலேஹோசஹள்ளியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பயங்கர விபத்து செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதில் பலர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கணபதி ஊர்வலத்தின் போது லாரி மோதி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு வலியைத் தாங்கும் வலிமையையும் கடவுள் அளிப்பார். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த இலவச சிகிச்சையை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "ஹாசன் மாவட்டம் மொசலேஹோசல்லியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கொடூரமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் ஆன்மாக்கள் நித்திய சாந்தியடையவும், இந்த வலியைத் தாங்கும் வலிமையை அவர்களின் குடும்பங்களுக்கு கடவுள் வழங்கவும் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் வழங்கும் மற்றும் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications